என் மலர்
சிவகங்கை
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா போராட்டம் நடந்தது.
- வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொ ழிந்தார். பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்க ராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்க ளுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
- சிவகங்கையில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
- தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.
இதில் பங்கேற்பாளர் களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்து கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்க ப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை , சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
வேலையளிப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து http://www.kdourtagoxin பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை: ஆணையர் (சமரசம்) அலுவலகம் வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழில்க பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11.11.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/ம். வேலையளிப்பவரானால் ரூ.250/ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https:/www.karuvoolam.tn.gov.in/challanv/echallan வலைதளத்தில் tchallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு(challam) வைத்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
- கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்து வருகிறார். இவர்களுக்கு மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளை சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தேவகோட்டை நகரில் பெட்டிக்கடையில் சில்லறை விற்பனை செய்து வந்த ரகுநாதபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த ராமு மகன் முருகன் (36), கல்லூரி நகர் இடையன்வயல் பகுதியை சேர்ந்த நெல்லியப்பன் மகன் செந்தில் (47) இருவரையும் பிடித்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரிய வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பரகத்தெருவை சேர்ந்த அன்வர் மகன் செய்யது இம்ரான் கான் (29), பெத்த தேவன்கோட்டை கருப்பையா மகன் வாசு (50), மேட்டு கற்களத்தூர் பாலுசாமி மகன் கார்த்தியராசு ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
மேலும் இவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும், ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
- 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
- ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.
ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.
முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
- வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
- விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம், பால், அரிசி மாவு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
- தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
- தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து ''எனது வாக்கு, எனது உரிமை-ஒரு வாக்கின் சக்தி'' என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியை நடத்தியது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக சுவரொட்டி தயாரித்த மாணவ-மாணவிகளை பாராட்டினர். சிறந்த சுவரொட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரால் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோருடன் இணைந்து தலையாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அரசு விதியை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் நடந்த இந்த சோதனையில் துப்புரவு அலுவலர் ஜெயபால் கடைகளிலிருந்து 180 கிலோ பிளாஸ்டிக் பை, கப் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். அரசு விதியை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
- தீபாவளி பலகாரம் தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமா னதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப்பொ ருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்காி உணவு பொருட்களை தயாரிப்பவா்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவு கையாள்பவா்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாத வகையில் பணியில் அமா்த்தப்பட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விவரச் சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவாி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வகையில் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்களை விற்பனை செய்த பின்னா் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண், பதிவு எண்ணை அச்சடித்து இருக்க வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக
இது தொடா்பான உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்குடி
அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே மறுகால் பாயும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர்.
- ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏரியூர் ஊராட்சியில் ஏரி கண்மாய் உள்ளது. சுமார் 227 ஏக்கர் பரப்பளவில், 3 டி.எம்.சி. தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு இது பெரிய கண்மாய் ஆகும்.
இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காமலை, அழகர்கோவில் மலை, பூதகுடி மலை போன்ற பல்வேறு மலைகளில் இருந்து பெய்யும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வருகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கண்மாயின் நீர்வரத்து பாதை கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களால் தண்ணீர் வரத்து பாதை முற்றிலுமாகத் தடைபட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் பெய்த மழையால் கண்மாய் மறுகால் பாய்ந்தது.தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, வரத்துக் கால்வாய் மூலம் ஏரி கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து அனைத்து கலிங்குகளின் வழியாக தண்ணீர் மறுகால் பாய்கிறது.
அருவி போல் தண்ணீர் கொட்டுவதை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மறுகால் பாயும் தண்ணீரில் அவர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தண்ணீர் அருவி போல் கொட்டுவதை பார்க்கும் போது, குற்றாலம், மூணாறு, போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதைப் போல உணருகிறோம் என்றனர்.
ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு,
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு (வயது 33). சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதன் காரணமாக துக்கத்தில் இருந்த ரகு அடிக்கடி மது குடித்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த ரகு நேற்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு சென்றார். அங்குள்ள பெரியார் கால்வாய் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் இரவு ரகு மது அருந்தினார்.
போதை தலைக்கேறிய நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பெரியார் கால்வாய் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த கால்வாயில் விழுந்தது. இதில் ரகு கால்வாயில் மூழ்கினார். இரவு நேரம் என்பதால் அவர் கால்வாயில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. போதையில் இருந்த காரணத்தால் அவரால் சுதாரித்துக் கொள்ள முடிய வில்லை. இதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி ரகு மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






