search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darna strike"

    • ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா போராட்டம் நடந்தது.
    • வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொ ழிந்தார். பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்க ராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

    ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்க ளுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    ×