என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு

    • காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×