என் மலர்tooltip icon

    சேலம்

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
    • 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருகே, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயத்துடன் நேற்றிரவு மயங்கி கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.

    இதில், மயங்கி கிடந்த வாலிபர் மணியனூர் கந்தாயம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. கார்த்தி 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்து சுற்றிதிரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி தவறி விழுந்து காயம டைந்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி டோல்கேட் பகுதியில் இன்று டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் உட்பட 10க்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

    கருப்பூர்:

    ஆன்லைன் வழக்கு பதிவு முறையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி டோல்கேட் பகுதியில் இன்று டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், சிகரம் அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்கம்,

    நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் உட்பட 10க்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் கருப்புக்கொடி கட்டியும், கருப்பு பேட்ச் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார் மாநில கவுரவத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் மாதேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் தவசியப்பன், ஓமலூர் ஒன்றிய தலைவர் முத்துசாமி, சேலம் மாநகர் தலைவர் கர்ண மூர்த்தி, உட்பட சேலம் மாவட்டத்தில் இருந்து150-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை முதல் 3 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி, நாளை மாலை 7 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30-ந் ேததி காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் ெபாங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு திருமஞ்சன திருவீதி உலா, பூங்கரகம், அக்னி கரகம், சக்தி கரகம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு மேல், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு கும்ப பூஜை செய்யப்பட்டு, இசக்கி அம்மன் குழந்தையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    மே 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர். 

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

    சேலம்:

    சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

    கொரோ பாதிப்பு

    நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனை களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முன்தினம் வரை 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 226 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். கடந்த ஒரு ஆண்டாக உயிரிழப்பு இல்லை.

    முதியவர் பலி

    இந்த சூழலில் இன்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஜாகிர் ரெட்டி பட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதார துறையினர் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதியவர் வசித்து வந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அவருடன் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு முதியவர் பலியானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் குணசேகரன் என்கிற கெத்தை சேகர். பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது ரவுடி கெத்தை சேகர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கெத்தை சேகரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கெத்தை சேகர் போலீசாரிடம் சிக்கினான். அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த களர்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
    • பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிக மானதால் அதை விவ சாயிகள் கீழே கொட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது, இதனையடுத்து தர்மபுரி விவசாயிகள் தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்தக் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் கூடுத லாக உற்பத்தியாகும் தக்கா ளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்க லம், அஸ்தம்பட்டி தாத காப்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்ட மாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. உழவர் சந்தைகளில் தர்மபுரி தக்காளி இதுவரை 150 டன் தக்காளி விற்பனை ஆகி உள்ளது. இதனை விவசா யிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்,

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் பயனபெறும் வகையில் கடலூரில் உற்பத்தியாகும் பலாப்ப ழங்கள் சேலம் உழவர் சந்தை களில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிர மணியம் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனையடுத்து நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரம ணியம் கலந்து கொண்டு பலாப்பழ விற்பனை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி ,சரோஜினி உள்பட விவசாயிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு சில வாரங்க ளில் மலைப்பிரதேசத்தில் விலை கூடிய பீட்ரூட், கேரட் பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம். இதே போல் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    • துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
    • இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கருப்பனார், மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

    தொடர்ந்து பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. துக்கியாம்பாளையம், மேலுார், மாரியம்மன் புதுர், மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    சேலம்:

    சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக அந்த கட்சி யினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றனர், அவர்கள் கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    இதில், மகாவீரர் என்ற வடமாநிலத்தவர் நடத்தி வரும் துணிக்கடையில் பணம் கேட்டபோது, தற்போது வியாபாரம் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி 100 ரூபாயும், 200 ரூபாயும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியா பாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என கூறி கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

    இதனால் அவர்களுக்கி டையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் நிதி வசூலிக்க வந்தவர்கள் வியாபாரி மகாவீரரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு மிரட்டி சென்றதாக தெரி கிறது. உடனே மகாவீரர் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்பு அவர், அருணாச்சலஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

    இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார்.
    • ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார். இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் அமானி கொண்ட லாம்பட்டி காட்டூரைச் சேர்ந்தவர் மோகன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செய லாளரான இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார். அங்கிருந்த பணியாளர் வாகனத்திற்கு 15 ரூபாய் மற்றும் டோக்கன் வழங்கினார்.

    அப்போது வண்டியில் ஹெல்மெட் உள்ளது என மோகன் கூறினார். அதற்கு பணியாளர் ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார்.

    இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெல்மெட்டுக்கு கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×