என் மலர்
சேலம்
- ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது
- கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இவை வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாழப்பாடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரவீன்குமார் (வயது 18) என்பவர் அங்குள்ள நீரோடையில் குளித்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நீர்வீழ்ச்சி படி, வழிப்பாதை, சாலை பராமரிப்பு பணி ஆகியவைகளை மேற்கொள்வதற்காக ஆணைவாரி நீர்வீழ்ச்சி முட்டல் ஏரியை வனத்துறையினர் மூடினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல், முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், ஏரியில் படகு சவாரி, பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், ஆணை வாரி நீர்வீழ்ச்சி பகுதியில், தண்ணீர் கொட்டும் இடத்தில் கைப்பிடி அமைத்தல், படிகள் சீரமைப்பு மற்றும் நீரோடை சீரமைப்பு, சாலை மண் அரிப்பு இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர், என்று கூறினர்.
- ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் ஈடுபட்டவர்களை பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.
இதற்காக ஆனந்தின் ஆதரவாளர்கள், கொலையாளிகளின் எதிரிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த குற்ற தடுப்பு போலீசார், சேலம் மாநகர போலீசருக்கு தகவல் அளித்தனர். இதனை விசாரித்த வீராணம் போலீசார், நேற்று கார்த்திகை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கவும் ரூ.34 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.
- அதில் இரவு நேரங்களில் 250 லோடு மண் குட்டையிலிருந்து கடத்தப்பட்ட தாகவும், மேலும் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் மண் சமன்ப டுத்தும் பணி நடைபெறு வதாகவும் தெரிவித்திருந்தார்.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இடங்க ணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கொசவப்பட்டியில் உள்ள குட்டை மற்றும் அதன் அருகே உள்ள நிலம் என சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் நீர்தேக்கி வைக்க வும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறு வர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கவும் ரூ.34 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜ்(வயது 60) என்பவர் கடந்த 24-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் இரவு நேரங்களில் 250 லோடு மண் குட்டையிலிருந்து கடத்தப்பட்ட தாகவும், மேலும் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் மண் சமன்ப டுத்தும் பணி நடைபெறு வதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சங்ககிரி வருவாய் துறை யினர் குட்டையை களஆய்வு செய்து அறிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்பினர். குட்டையின் ஒரு பகுதியில் சுடுகாடு இருந்தது. இங்கு சுமார் 35 ஆண்டு பழமையான ஆலமரம் நின்றது. அப்பகு திக்கு வருவோர் இளைப்பாற அந்த மரத்தை பயன்படுத்தினர்.
மேலும் அதில் நுாற்றுக்க ணக்கான பறவையினங்கள் குடியிருந்து வந்தன.இந்நிலையில் அந்த மரத்தின் 90 சதவீத கிளைகளை குட்டையை சீர்செய்யும் பணிக்காக அகற்றிவிட்டனர்.இதனால் மக்கள் இளைப்பாற இடம் இல்லாமல் அவதிபொபடும் நிலை ஏற்பட்டுள்ளது., பறவைகள் கூடுகட்ட வழியின்றி தவிக்கின்றன.
பொதுவாக மரங்களை அகற்ற வேண்டும் என்றால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வருவாய்துறையினரிடம் அனுமதி வேண்டும் என்பது அரசு விதியாகும்.ஆனால் கொசவப்பட்டி குட்டையி லுள்ள ஆலமர கிளைகளை அகற்ற சங்ககிரி வருவாய்து றையினரிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அகற்றியது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- தாரமங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர்.
- சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது.
சங்ககிரி:
–சேலம் மாவட்டம், தார மங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தாய் செல்வியுடன் (47), தார மங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், ஐயங்காட்டூர் என்ற இடத்தில் சென்று கொண்டி ருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்தி ருந்த செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காய மடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே செல்வி இறந்து விட்டதாக தெரி வித்தனர். மணிகண்டன் சிறிய காயங்க ளுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து சங்க கிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அங்கேரி கொங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கெடியரசன் (வயது 36). இவர் சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கழுத்து தலை உள்பட பல பகுதிகளில் படு காயம் அடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கொடியரசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து அவரது மனைவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- மேட்டூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
- நகர்மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க்கிறோம்.
மேட்டூர்:
மேட்டூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோiர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி பகுதியில் துப்புரவு பணியினை தனியாரிடம் ஒப்படைப்பது. சின்ன பார்க்கில் உள்ளவிளையாட்டு சாதனங்களை சீரமைப்பது . நகராட்சி நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டாரை மாற்றி புதிய மோட்டார் பொருத்துவது என்பது உட்பட 80க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
ரங்கசாமி(தி.மு.க.): நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து நகர்மன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசுகிறார். அவர் ஜாதியை இழிவுபடுத்தி பேசுகிறார். நகர்மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க்கிறோம்.
இனிவரும் காலங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை நாம் ஏற்க வேண்டாம். நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக பேசியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவரை உடனடியாக நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வரச் சொல்லுங்கள்.
நகராட்சி பொறியாளர் மணிமாறன்: துப்புர ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்ததற்கு அவர் வர மறுக்கிறார். அவரை நேரில் அழைத்து விசாரணை செய்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கீதா பாலு(தி.மு.க.): நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து தற்போது உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசுகிறார். இதனால்அவரை நகர்மன்ற கூட்டு அரங்கிற்கு வரவழைத்து விசாரணை செய்ய வேண்டும். நகராட்சி பொறியாளர் அழைத்து வரவில்லை என்றால் நகர்மன்ற தலைவர் அவரை போனில் தொடர்பு கொண்டு வரவழைக்க வேண்டும்.
( இந்த வேளையில் நகர் மன்ற தலைவர் சந்திரா துப்புரவு அலுவலர் அங்க முத்திற்கு தனது செல்போனில் இருந்து போன்செய்தார். ஆனால் துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து அவருடைய தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் நகர் மன்ற தலைவர் சந்திரா என்னுடைய போனை அழைப்பையும் அவர் ஏற்கவில்லை என்று கூறினார். உடனே பல நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிக்கும் நகர்மன்ற தலைவருக்கும் கீழ்படியாத நகராட்சி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பினார்கள்).
ஈஸ்வரி(தி.மு.க.): துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்துவை தொடர்பு கொண்டு என்னுடைய வார்டிற்கு துப்புரவு பணிக்கு ஆட்களை அனுப்புங்கள் என்று கூறினால் இது எனது வேலை இல்லை என்று சொல்கிறார்.
மாரியம்மாள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): ஜாதியை இழிவாக பேசும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டுக்கு குடிநீர் சீராக வருவதில்லை. தெரு விளக்கு எறிவதில்லை. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகளை நீக்கி தர வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணன், தி.மு.க. கவுன்சிலர்கள் திலகா, ஈஸ்வரி, பூங்கொடி, அனிதா இளம்ப்ருதி, உமா ஆகியோர் தங்கள் வார்டுகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
- பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சேலம்:
பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கும் இன்று, நாளை மற்றும் 1-ந் தேதி மே தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடு முறை வருவதால் நகர்புறங்க ளில் வசிப்பவர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் சேலம் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து சென்னை, பெங்க ளூர், கோவை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 40 சிறப்பு பாஸ்கள் இயக்கபட்டன. இதேபோல கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கினர். கோடை விடுமுறைக்காகவும் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
- வேதாசலம் தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்று கூறி கோரிக்கை அடங்கிய மனுக்களையும், போட்டோக்களையும் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு சங்கு ஊதிக்கொண்டு மணியடித்தவாறு வந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆணை யாளர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்த தி.மு.க. கவுன்சிலர் வேதாசலம் தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்று கூறி கோரிக்கை அடங்கிய மனுக்களையும், போட்டோக்களையும் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு சங்கு ஊதிக்கொண்டு மணியடித்தவாறு வந்தார்.
இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. பின்னர் தனது வார்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூறி ஆணையாளரிடம் மனுகொடுத்து விட்டு அமர்ந்தார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. கவுன்சிலர் அனுராதா தனது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே தேங்கும் மழை நீர் மற்றும் சாக்கடை நீரை அகற்ற புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
பா.ம.க. கவுன்சிலர் தனபால், நகராட்சி பகுதி யில் உள்ள 12 மயானங்க ளையும் பராமரித்து குடிநீர், மின் விளக்கு அமைக்க வேண்டும் என்றும், சந்தை பேட்டை பகுதியில் இயங்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிரந்தர இடம் உருவாக்கி தருமாறு வலியுறுத்தினார்.
கூட்டத்தில் துணைத்த லைவர் தனம், அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ர மணியம், தி.மு.க. கவுன்சி லர்கள் சுபர்ணா, அமுதா, அகிலாண்டேஸ்வரி, கோகிலா, மைசூர், அர்த்த னாரி, முருகன், லட்சுமி, ஆர்த்தி, சாமுண்டிஸ்வரி, பா.ம.க. கவுன்சிலர் பழனிசாமி உட்பட 13 பேர் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தங்களது வார்டு பகு திக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்தாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது.
- பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர், கிளை ஊராட்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரமேஷ், வெங்க டேஷ், சாமுராய் குரு, அசோகன் உள்ளிட்டோர், பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு, பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. போதுமான நிதியில்லை என்று ஒன்றிய தலைவர் பதில் அளித்தார். இதை யடுத்து, பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அனைத்து கவுன்சி லர்களும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, ஒன்றிய அலுவலக நுழைவா யிலில் அமர்ந்து கோஷமிட்ட படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலு வலகத்தில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்ன தண்டா கிராமத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்தது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழையும் ஒற்றை யானை, அங்குள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மேட்டூர் வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையில் பாரஸ்டர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் வந்து, பொதுமக்களுடன் இணைந்து அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
இதனிடையே, யானை வாழை தோட்டத்தை சேதம் செய்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏ ஆய்வு
இந்த நிலையில் சேலம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் மற்றும் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ ஆகியோர் சின்னத் தண்டா கிராமத்திற்கு சென்று யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கிராம மக்க ளிடம், வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சீர்குலைந்த சாலை
மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்திற்கு உட்பட்ட வீரனூர் - கூலையூர் சாலை வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. சீர்குலைந்துள்ள அந்த சாலையை புதுப்பிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கொளத்தூரை அடுத்த காரைக்காடு கிராமம் ஒட்டி அமைந்துள்ள சின்ன காளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக வும் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காகவும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. ஏற்கனவே வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மேட்டூர் வந்த மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், கோனூர் கிராமம் மற்றும் காரைக்காடு பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட வன பாதுகாவ லரிடம் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆய்வின்போது மேட்டூர் வன சரக அலுவலர் சிவானந்தம், பாரஸ்டர் வெங்கடேஷ், பா.ம.க மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் மாரியப்பன், மேச்சேரி ஒன்றிய பா.ம.க செயலாளர் சுதாகரன் மற்றும் பலர் உடன் சென்றனர்.
பாலாறு பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு
தமிழக கர்நாடக எல்லை பகுதியான பாலாறு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களிடம், கிலோ ஒன்றுக்கு ரூ. 3 வரை கர்நாடக வனத்துறையினர் வசூல் செய்வதாக, தமிழக மீனவர்கள் சதாசிவம் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சதாசிவம் எம்.எல்.ஏ, வரு வாய் துறையினர் மற்றும் வனத்துறையினருடன் பாலாறு பகுதிக்கு சென்று அங்குள்ள கர்நாடக வனத்துறையினரிடம், தமிழக மீனவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
- தாமோதரன் ஆன்லைனில் 22 முறை ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 399 முதலீடு செய்தார்.
- புகாரின் பேரில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 29). பட்டதாரி. இவரது செல்போனுக்கு பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பிய தாமோதரன் ஆன்லைனில் 22 முறை ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 399 முதலீடு செய்தார். அதற்கான கமிஷன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 310 பெற்றார். தாமோதரன் அந்த ஆன்லைன் மூலம் மீதி தொகையை திரும்ப பெற முயன்றார். ஆனால் அவரால் ரூ. 14 லட்சத்தை திரும்ப பெற முடியவில்லை.
அப்போதுதான் தாமோதரன் அந்த வெப்சைட் போலி என்பதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் தாமோதரன் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் விசாரணை நடத்தி வருகிறார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
- நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
நேற்று விநாடிக்கு 334 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 101.39 அடியாக சரிந்தது.






