வீராணம் அருகே ரவுடி கொலைக்கு பழிவாங்க திட்டமிட்ட உறவினர் கைது

ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.
வீராணம் அருகே ரவுடி கொலைக்கு பழிவாங்க  திட்டமிட்ட உறவினர் கைது
Published on

சேலம்:

சேலம் வீராணம் அருகே காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் ஈடுபட்டவர்களை பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.

இதற்காக ஆனந்தின் ஆதரவாளர்கள், கொலையாளிகளின் எதிரிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த குற்ற தடுப்பு போலீசார், சேலம் மாநகர போலீசருக்கு தகவல் அளித்தனர். இதனை விசாரித்த வீராணம் போலீசார், நேற்று கார்த்திகை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com