search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்புதுப்புரவு ஆய்வாளர் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்
    X

    மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்புதுப்புரவு ஆய்வாளர் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்

    • மேட்டூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • நகர்மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க்கிறோம்.

    மேட்டூர்:

    மேட்டூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோiர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி பகுதியில் துப்புரவு பணியினை தனியாரிடம் ஒப்படைப்பது. சின்ன பார்க்கில் உள்ளவிளையாட்டு சாதனங்களை சீரமைப்பது . நகராட்சி நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டாரை மாற்றி புதிய மோட்டார் பொருத்துவது என்பது உட்பட 80க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ரங்கசாமி(தி.மு.க.): நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து நகர்மன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசுகிறார். அவர் ஜாதியை இழிவுபடுத்தி பேசுகிறார். நகர்மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க்கிறோம்.

    இனிவரும் காலங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை நாம் ஏற்க வேண்டாம். நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக பேசியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவரை உடனடியாக நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வரச் சொல்லுங்கள்.

    நகராட்சி பொறியாளர் மணிமாறன்: துப்புர ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்ததற்கு அவர் வர மறுக்கிறார். அவரை நேரில் அழைத்து விசாரணை செய்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கீதா பாலு(தி.மு.க.): நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து தற்போது உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசுகிறார். இதனால்அவரை நகர்மன்ற கூட்டு அரங்கிற்கு வரவழைத்து விசாரணை செய்ய வேண்டும். நகராட்சி பொறியாளர் அழைத்து வரவில்லை என்றால் நகர்மன்ற தலைவர் அவரை போனில் தொடர்பு கொண்டு வரவழைக்க வேண்டும்.

    ( இந்த வேளையில் நகர் மன்ற தலைவர் சந்திரா துப்புரவு அலுவலர் அங்க முத்திற்கு தனது செல்போனில் இருந்து போன்செய்தார். ஆனால் துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து அவருடைய தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் நகர் மன்ற தலைவர் சந்திரா என்னுடைய போனை அழைப்பையும் அவர் ஏற்கவில்லை என்று கூறினார். உடனே பல நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிக்கும் நகர்மன்ற தலைவருக்கும் கீழ்படியாத நகராட்சி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பினார்கள்).

    ஈஸ்வரி(தி.மு.க.): துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்துவை தொடர்பு கொண்டு என்னுடைய வார்டிற்கு துப்புரவு பணிக்கு ஆட்களை அனுப்புங்கள் என்று கூறினால் இது எனது வேலை இல்லை என்று சொல்கிறார்.

    மாரியம்மாள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): ஜாதியை இழிவாக பேசும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டுக்கு குடிநீர் சீராக வருவதில்லை. தெரு விளக்கு எறிவதில்லை. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகளை நீக்கி தர வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணன், தி.மு.க. கவுன்சிலர்கள் திலகா, ஈஸ்வரி, பூங்கொடி, அனிதா இளம்ப்ருதி, உமா ஆகியோர் தங்கள் வார்டுகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    Next Story
    ×