என் மலர்
நீங்கள் தேடியது "உறவினர் கைது"
- ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ரிபா. இவர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கொயிலாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடிதத்தில், காப்பாட்டை சேர்ந்த அவரது தாத்தா அபுபக்கர் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனையடைந்து தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அபுபக்கரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார்.
- ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர், நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது30). கார் டிரைவர். அதேபகுதியில் வசித்து வந்த இவரது மாமனார் உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த்திபன் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பார்த்திபனின் நெருங்கிய உறவினரான எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டியன் என்கிற ராஜூ என்பவர் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதத்தால் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து ராஜூவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் ஈடுபட்டவர்களை பழிக்குப் பழி தீர்க்க, ஆனந்தின் மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) திட்டமிட்டு வந்தார்.
இதற்காக ஆனந்தின் ஆதரவாளர்கள், கொலையாளிகளின் எதிரிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த குற்ற தடுப்பு போலீசார், சேலம் மாநகர போலீசருக்கு தகவல் அளித்தனர். இதனை விசாரித்த வீராணம் போலீசார், நேற்று கார்த்திகை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
- உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.
வேளச்சேரி:
பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). கூலித்தொழிலாளி. இவர் உறவினரான விஜயகாந்த் என்பவரின் வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உறவினரான விஜயகாந்த் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியுடன் ராஜீவ்காந்தி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.
கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஆத்திரத்தில் இருந்த விஜயகாந்த் கடந்த 16-ந்தேதி இரவு உறவினரான ராஜீவ்காந்தியை தீர்த்துகட்ட முடிவு செய்து பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மது குடித்தபோது போதையில் இருந்த ராஜீவ்காந்தியை தாக்கி அவரது கழுத்தை நெரித்து விஜயகாந்த் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்த கொலை தொடர்பாக கைதான விஜயகாந்திடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார்.
- சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவரது மனைவி துர்கா. தம்பதியின் ஒரே மகள் ரத்தினகுமாரி (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
கடந்த 26-ந் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். சிறுமியின் உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மவுலு. காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டு மகள்களும் நரசாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் மவுலு மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார். சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை சிறுமி வெளியில் சொல்லிவிட்டால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய மவுலு சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.
மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஊர் முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்களுடன் மவுலு ஒன்றும் தெரியாதது போல் போலீஸ் நிலையம் சென்று இருந்தார். கடந்த 3 நாட்களாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மவுலுவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மவுலுவின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுமியின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார்.
- விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கி இருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியாக விடுதியின் மாடிக்கு சென்ற மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனைக் கண்ட விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகள் குழந்தை பெற்ற மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார். விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது உறவினர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததால் கர்ப்பமானதாகவும், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரியாமல் இருப்பதற்காக இறுகிய ஆடைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தவர் என்பது தெரியவந்தது.
- சிறுவன், மனுவின் சகோதரர் மகன் என்பதும், அவருக்கு 9 வயதே ஆவதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணப்பண்டிகையின்போது சிறுவன் ஒருவனுக்கு வாலிபர் ஒருவர் பீர் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குழந்தைகள் நல அமைப்பினருக்கும் புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினர். இதில் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தவர் என்பது தெரியவந்தது.
அந்த சிறுவன், மனுவின் சகோதரர் மகன் என்பதும், அவருக்கு 9 வயதே ஆவதும் தெரியவந்தது. இதையடுத்து மனு மீது குழந்தைகள் நல அமைப்பினர் நெய்யாற்றின் கரை போலீசில் புகார் செய்தனர். அவர்கள் மனு மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மனுவை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.
- தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர்.
கோவை:
நெல்லையை சேர்ந்த வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது உறவினர் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து சோர்வாக இருந்தார்.இதனை பார்த்த சிறுமியின் உறவினர், தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.






