என் மலர்
சேலம்
- கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
- நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
சேலம்:
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் தலைவா சல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், நீலகிரி மாவட்ட குற்றப்பி ரிவு டி.எஸ்.பி ஆகவும், சேலம் மாநகர ரவுடிகள் கண்காணிப்பு (ஓ.சி.ஐ.யூ) பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம், கிருஷ்ண கிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆகவும், நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட்
டுள்ளனர்.
இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். மேலும் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சேலம் மாந கரம் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் ஆகவும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சேலம் மாநகரம் அம்மாபேட்டை சரக உதவி கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள்.
- சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள்
- புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 66).
இவர் கடந்த 14-ந் தேதி மாலை பொதியம்பட்டி - புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகிறார்.
- இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
- முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
இதனால் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.
அவரது உடலை பரிசோதித்த அரசு டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் உறவினர்கள் கதறினர்.
இது குறித்த முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் சீலநா யக்கன்பட்டியில் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. அங்கு ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெத்தநாயக்கன்பா ளையம் மணியார் குண்டத்தை சேர்ந்த குமார் (வயது 39) என்வர் டிராக்டர் வாங்க விண்ணப்பம் அளித்தார். அதற்கு குமாரிடம் நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் நோட்டுகளை மாவட்ட மேலாளிடம் கொடுக்க குமார் வந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் லுங்கி அணிந்து அலுவலகத்திற்கு வந்தனர். குமார் மாவட்ட மேலாளர் சாந்தியிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த பணத்தை அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்க அறிவுறுத்தினார்.
அதன்படி குமார் கொடுத்த பணத்தை உதவி யாளர் பெற்றுக் கொண்டார். அப்போது போலீசார் கையும் களமாக பிடித்து மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தியை கைது செய்தனர்.
தொடர்ந்து இரவு முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்று அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதைனிடையே, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் பெண்கள் கிளை சிறையில் அவர்களை அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
- வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரோகினி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரோகிணி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் போன் செய்தும் போனை ரோகிணி எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போன் செய்தும் ரோகிணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அதன் பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில், தொடர்ந்து இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடித்தது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 522 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 406 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி 103.35 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 100.93 அடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் 4 தினங்களில் 2.42 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் சொல்லி கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கடந்த 10-ந்தேதி பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டி ருந்தது.
- இந்த நிலையில் பணி மேம்பாட்டு பயிற்சி வருகிற 17-ந்தேதி அந்தந்த குறுவள மையங்களில் நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழக அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் சொல்லி கொடுக்கும் அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கடந்த 10-ந்தேதி பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டி ருந்தது. பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டதால் ஆசிரியர்களின் பயிற்சியும் நிர்வாக காரணம் கூறி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பணி மேம்பாட்டு பயிற்சி வருகிற 17-ந்தேதி அந்தந்த குறுவள மையங்களில் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், தற்காலிக ஆசியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
- தாய் சோலையம்மாள், அண்ணன் சதீஷ் ஆகியோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
- நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும் எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் சத்யா. இவர், அவருடைய தாய் சோலையம்மாள், அண்ணன் சதீஷ் ஆகியோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துவிட்டு, அவர்கள் கூறியதாவது:-
கோனேரிப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிர் சுய உதவி குழுவில் நாங்கள் இருந்து வந்தோம். கடந்த ஆண்டு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு எங்கள் குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வந்தது. இந்த நிலையில் சொந்த வெறுப்பின் காரணமாக குழுவில் இருந்து சோபியா மேரி என்ற பெண் விலகினார். இதனால் குழுவில் பிரச்சினை ஏற்பட்டது.
இது குறித்து கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரிடம் கேட்டபோது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும் எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், எங்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அரசால் ஒதுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கடன் தொகையையும் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தனர்.
- வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.
- பொதுக்கிணற்றின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை அருகே உள்ள திருமலைகிரி அடுத்த சங்கரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் கவினேஷ், வீட்டின் அருகில் உள்ள பொதுக்கி ணற்றின் பக்கத்தில் விளை யாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதைக் கண்ட பொது மக்கள் மற்றும் குடும்பத்தினர், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்க போராடினர். ஆனால் சுமார் ஒரு மணி நேர போராட்ட த்திற்கு பின் கவினேஷ் பிணமாக மீட்கப்பட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கவினேஷன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
- சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
- போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ேஜாடுகுளியை சேர்ந்தவர் ெஜயப்பிரகாஷ் (வயது 28). இவருக்கும், ஜலகண்டாபுரம் வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
இதை அறிந்த சமூக நலத்துறையின் நங்கவள்ளி வட்டார விரிவாக்க அலுவலர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதையடுத்து ெஜயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் விஜயா, சிறுமியின் தாய் லலிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வட்டார விரிவாக்க அதிகாரி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணி யிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு சேலம் மாவட்ட நிர்வாகம் தற் போது வெளியிட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு வயது வரம்பு 23 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணி யிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு சேலம் மாவட்ட நிர்வாகம் தற் போது வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள பணியிடங்கள் விபரம்:-
பல் மருத்துவ சிகிச்சை டாக்டர்-7 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்-3 பேர், டிரைவர்-1 பேர், எ.என்.எம்-2, ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட்-1, பல் மருத்துவ உதவியாளர் -3, ஆய்வக டெக்னீசியன்-1, ஆடியோமெட்ரிஷியன்-1, பேசும் பயிற்சி அளிக்கும் தெரபிஸ்ட்-1, ஆலோச கர்-3, ஓ.டி உதவியாளர் -3, மருத்துவமனை பணி யாளர்கள்-16 பேர், பிசியோதெரபிஸ்ட்-1, கிளீனர் அண்ட் உதவி யாளர்-1 என 44 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட பதவிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்ப டுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு வயது வரம்பு 23 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை பணியாளர்கள், கிளீனர் அண்ட் உதவியாளர் பணி களுக்கு மட்டும் 18 வயது 40 வயது வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் அருகில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வருகிற 25-ந்தேதி 5 மணிக்குள் சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நிர்வாக செய லாளர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ, விரைவு தபால் , மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப் படுகின்றன.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.






