என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 17-ந்தேதி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பயிற்சி
    X

    சேலம் மாவட்டத்தில் 17-ந்தேதி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பயிற்சி

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் சொல்லி கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கடந்த 10-ந்தேதி பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டி ருந்தது.
    • இந்த நிலையில் பணி மேம்பாட்டு பயிற்சி வருகிற 17-ந்தேதி அந்தந்த குறுவள மையங்களில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் சொல்லி கொடுக்கும் அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கடந்த 10-ந்தேதி பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டி ருந்தது. பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டதால் ஆசிரியர்களின் பயிற்சியும் நிர்வாக காரணம் கூறி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பணி மேம்பாட்டு பயிற்சி வருகிற 17-ந்தேதி அந்தந்த குறுவள மையங்களில் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், தற்காலிக ஆசியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    Next Story
    ×