என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் 44 காலி பணியிடங்கள்
- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணி யிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு சேலம் மாவட்ட நிர்வாகம் தற் போது வெளியிட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு வயது வரம்பு 23 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணி யிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு சேலம் மாவட்ட நிர்வாகம் தற் போது வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள பணியிடங்கள் விபரம்:-
பல் மருத்துவ சிகிச்சை டாக்டர்-7 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்-3 பேர், டிரைவர்-1 பேர், எ.என்.எம்-2, ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட்-1, பல் மருத்துவ உதவியாளர் -3, ஆய்வக டெக்னீசியன்-1, ஆடியோமெட்ரிஷியன்-1, பேசும் பயிற்சி அளிக்கும் தெரபிஸ்ட்-1, ஆலோச கர்-3, ஓ.டி உதவியாளர் -3, மருத்துவமனை பணி யாளர்கள்-16 பேர், பிசியோதெரபிஸ்ட்-1, கிளீனர் அண்ட் உதவி யாளர்-1 என 44 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட பதவிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்ப டுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு வயது வரம்பு 23 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை பணியாளர்கள், கிளீனர் அண்ட் உதவியாளர் பணி களுக்கு மட்டும் 18 வயது 40 வயது வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் அருகில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வருகிற 25-ந்தேதி 5 மணிக்குள் சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நிர்வாக செய லாளர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ, விரைவு தபால் , மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப் படுகின்றன.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.






