என் மலர்
சேலம்
ஏற்காடு:
கோடை காலம் முடிவ டைந்து தென் மேற்கு பருவ மழை காலம் தொடங்கி விட்டது. இந்த சூழலிலும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்க ளில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து தப்ப ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கா னோர் வருகிறார்கள். ஏற்காடு ஏரியில் பலர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வித்தியாசமான நிலப்பரப்பு களை பார்த்து ரசித்தனர். சிலர் மலையேற்றம் சென்று ஏற்காட்டின் புதிய பாதைகளையும், பழத்தோட்டங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.
ஆரஞ்சு, பலா, ஏலக்காய், கொய்யா, கருப்பு மிளகு தோட்டங்களையும் கண்டு ரசித்தனர். காபி தோட்டங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். தாவரவியல் பூங்காவில் எண்ணற்ற ஆர்க்கிட் வகைகளை ரசித்தனர். அண்ணா பூங்கா, லேடி சீட், ஆர்தர் இருக்கை, பகோடா பாயிண்ட், கரடிகள் குகை, கிளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் மற்றும் மதியம் 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பரா மரிப்பு பணி மேற்கொள்ளப் பட்ட உள்ளதால் வருகிற 18, 20, 22, 24, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 6:25 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் மற்றும் மதியம் 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும்.
சேலம்:
பெண் சிசுக்கொலையை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் அந்த குழந்தை பேரில் ரூ.50 ஆயிரம், 2 குழந்தைகள் இருப்பின் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு 16 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகை வட்டியுடன் பயனாளி வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் 3 வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். புதிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்படலாம். என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
- வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இவர்கள் தங்குவதற்காக, ஏற்காட்டில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிக்கான உரிமை கட்டணம் செலுத்த, ஏற்காடு ஊராட்சிமன்றம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீசில், ஏற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகள், விடுதி உரிமை கட்டணம் மற்றும் கட்டிட வரைப்படம் ஆகியவைகளை நோட்டீஸ் பெற்ற 7 தினங்களுக்குள் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று வரை தொடர்ந்து 338 நாட்களாக 100 அடிக்கு மேலாக நீடித்தது.
- கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
சேலம்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த நீர்பாசன ஆண்டு பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனை அடுத்து 2022-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பின்னர், அணை முழுவதும் நிரம்பி உபரி நீர்திறக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாகவும், நீர்வளத்துறை அதிகாரிகளின் நீர் மேலாண்மை காரணமாகவும், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று வரை தொடர்ந்து 338 நாட்களாக 100 அடிக்கு மேலாக நீடித்தது.
இதற்கு முன்பு 2005-2006-ம் ஆண்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 651 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 100.93 இருந்தது. இது வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை 100.29 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் இன்று பிற்பகலில் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாக குறைந்தது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்மட்டம் உயரும். இல்லாத பட்சத்தில் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
- இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.
சேலம்:
அறிவியல் மற்றும் தொழில் துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருங்கி ணைந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவ னங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதாவது, வைஷ்விக் பாரதீய வைகியானிக் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம் (விஏஐபிஹெச்ஏவி) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யால் அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்த உதவித்தொகை, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறந்த அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப த்துறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.
70-க்கும் மேற்பட்ட நாடு களில் வசிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமூகப் பொருளா தார மாற்றத்திற்கான நமது முயற்சியில் அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.
இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.
- சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.
- நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
சேலம்:
சேலம் நாச்சியப்பா தொழிற் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையமானது, தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம் புதுடெல்லி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதுபோன்ற தொழிற் பயிற்சிகளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தவிர இதர நிறுவனங்களில் படிக்க வேண்டுமெனில் அதிகமாக பயிற்சி கட்டணம் செலுத்தவேண்டி வரும். நமது நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர
வேலை வாய்ப்பு ஏற்படுத்தி
தரப்படுகிறது. இப்பயிற்சி யினை நிறைவு செய்பவர்களு க்கு கப்பல் நிறுவனங்கள், ரெயில்வே துறை சமையலர், விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி துறை, மருத்து
வமனை சமையலர், நட்சத்திர ஓட்டல்களில் அதிக சம்ப ளத்தில் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர்.
- வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம் - ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால்அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது.
- கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது. இதில் சேலம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை தாங்கி கால்நடை பராம ரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட் டங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கால்நடை மருத்துவப் பல்க லைக்கழக உதவி பேராசிரி யர் டாக்டர் கோபி, மாடுகளில் பெரியம்மை நோய் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஆர்.எஸ்.டி பாபு, கறவை மாடு கள் பராமரிப்பு குறித்து சங்ககிரி உதவி இயக்குனர் டாக்டர் முத்துக்குமார்,
வெறி நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் ரகுபதி, செல்லப் பிராணிகள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் அருள் பிரகாஷ்ராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் கிருபாநாத் மற்றும் டாக்டர் ஆஷா செய்திருந்தனர். கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- 2 வாலிபர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார்.
- கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டியை அடுத்த பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32). இவருக்கு அதே பகுதியைசேர்ந்த மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். இவர்களை மீட்டு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று பவித்ராவின் தந்தை சிவா என்பவர் அடையாளம் தெரியாத 3 பேருடன் கோபி யின் வீட்டிற்கு சென்று கோபியின் பெற்றோரிடம் ஆகியோருடன் தகராறு செய்தனர். இதை அறிந்த கோபியின் பெரியப்பா மகன் கார்த்திக் தட்டி கேட்டார்.
அப்போது சிவா மற்றும் அவருடன் வந்த நபர்கள் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். காயமடைந்த கார்த்திக் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளர். இது பற்றி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
- அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டூர்:
மேட்டூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலை யங்களில் இந்திய துணை ராணுவமான கோவையில் உள்ள மத்திய அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணை ஆய்வு
தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள இந்த போலீஸ் நிலைய எல்லைக ளில் மத கலவரங்கள் ஏற்பட்டுள்ளனவா? ஏற்ப டக்கூடிய சூழ்நிலை உள்ள னவா? என்றும், மதங்களின் அடிப்படையில் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் இயற்கை பேரி டர் காலங்க ளில் விரைந்து சென்று மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து காவிர கரை பகுதியி லும், மேட்டூர் அணை பகுதி யிலும் ஆய்வு செய்தனர். அப்போது அதிநவீன துப் பாக்கிகள், மீட்பு உபகர ணங்கள் ஆகியவற்றுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






