என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடை முடிந்த பின்னரும் கொளுத்தும் வெயில்:ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காடு:
கோடை காலம் முடிவ டைந்து தென் மேற்கு பருவ மழை காலம் தொடங்கி விட்டது. இந்த சூழலிலும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்க ளில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து தப்ப ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கா னோர் வருகிறார்கள். ஏற்காடு ஏரியில் பலர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வித்தியாசமான நிலப்பரப்பு களை பார்த்து ரசித்தனர். சிலர் மலையேற்றம் சென்று ஏற்காட்டின் புதிய பாதைகளையும், பழத்தோட்டங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.
ஆரஞ்சு, பலா, ஏலக்காய், கொய்யா, கருப்பு மிளகு தோட்டங்களையும் கண்டு ரசித்தனர். காபி தோட்டங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். தாவரவியல் பூங்காவில் எண்ணற்ற ஆர்க்கிட் வகைகளை ரசித்தனர். அண்ணா பூங்கா, லேடி சீட், ஆர்தர் இருக்கை, பகோடா பாயிண்ட், கரடிகள் குகை, கிளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






