search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பறிற்சி நிலையத்தில்  சமையல் கலை கைவினைஞர் பயிற்சி
    X

    நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பறிற்சி நிலையத்தில் சமையல் கலை கைவினைஞர் பயிற்சி

    • சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.
    • நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

    சேலம்:

    சேலம் நாச்சியப்பா தொழிற் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையமானது, தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம் புதுடெல்லி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதுபோன்ற தொழிற் பயிற்சிகளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தவிர இதர நிறுவனங்களில் படிக்க வேண்டுமெனில் அதிகமாக பயிற்சி கட்டணம் செலுத்தவேண்டி வரும். நமது நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர

    வேலை வாய்ப்பு ஏற்படுத்தி

    தரப்படுகிறது. இப்பயிற்சி யினை நிறைவு செய்பவர்களு க்கு கப்பல் நிறுவனங்கள், ரெயில்வே துறை சமையலர், விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி துறை, மருத்து

    வமனை சமையலர், நட்சத்திர ஓட்டல்களில் அதிக சம்ப ளத்தில் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×