என் மலர்
சேலம்
- கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
- இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.
- பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
- அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக குப்பனூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 36) என்பவர் பணியாற்றினார். 2-வது அக்ரஹாரம் ராஜகணபதி கோவில் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.
இதை பார்த்த கண்டக்டர் அந்த நபரிடம் ஏன் பயணச்சீட்டு எடுக்காமல் கீழே இறங்குகிறீர்கள்? என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் நடுரோட்டில் வைத்து லட்சுமிகாந்தனை தாக்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன.
தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கண்டக்டர் லட்சுமிகாந்தனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து கண்டக்டருடன் தகராறு செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ் (52) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்தனை தாக்கியதுடன் அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சதீசை போலீசார் கைது செய்தனர். இதை யடுத்து அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு, ஜெயிலில் அடைக் கப்பட்டார்.
- ஏற்காடு நெடுஞ்சாலையில் மத்திய சிறைச் சாலை எதிரே உள்ள இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது.
- இந்த ஏ.டி.எம் மையத்தி லிருந்து காலை 9 மணி அளவில் அபாய ஒலி ஒலித்தது.
சேலம்:
சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் மத்திய சிறைச் சாலை எதிரே உள்ள இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்தி லிருந்து காலை 9 மணி அள வில் அபாய ஒலி ஒலித்தது. இதனால் ஏ.டி.எம் மையம் அருகே உள்ளவர்கள் இது தொடர்பாக சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு அங்கு வந்த போலீசார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.டி.எம் மையத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார் களா? அல்லது எந்திர கோளாறா என சேலம் மாநகர அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் அதேபோல் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
- திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், இவரை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி ராணி கொடுத்த புகாரின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த பெண், ஷாகின் (வயது 38) மற்றும் இவரது உறவினர்கள் பிரகாஷ் என்கிற சித்திக்அலி (31) மற்றும் முஸ்தபா(28) ஆகிய 3 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பலை, ஒரே நாளில் கைது செய்த வாழப்பாடி போலீசாருக்கு, உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது.
- விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம்:
வீரகனூர் அருகே புளியங்குறிச்சி ஊராட்சி, வைரம் குட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருவதாக, தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், விஏஓ கலியபெருமாள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வைரம்குட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொக்லைன் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளுவது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலின் பேரில், விரகனூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார், ஆர்ஐ ஜெயா விசாரணை நடத்தியதில், மணல் அள்ளி யது புளியங்குறிச்சியைச் சேர்ந்த செந்தில் (வயது 35) என்பவரது பொக்லைன் மற்றும் லாரி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
- பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சேலம்:
சேலத்தில் உள்ள பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வர ருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பிரதோஷத்தில் முக்கிய நிகழ்வாக சிவன்-பார்வதி சமேதமாக கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த ஆனி மாதத்தில் கடந்த 1-ந் தேதியும் நேற்றும் சனி பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- 2 மோட்டார் சைக்கிளில் தலா 3 பேர் என 6 பேர் கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டில் வலம் வந்தனர்.
- 6 பேரும் ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் வனச்சரகர் வனத்துறையினர் பனைமடல், மண்ணூர் காப்புக்காடு, இரட்டை குச்சி மலை பகுதியில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் தலா 3 பேர் என 6 பேர் கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டில் வலம் வந்தனர்.
இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், சின்னம சமுத்திரத்தை சேர்ந்த சரவணன் (வயது 46), பொன்னுசாமி (62), மணிகண்டன் (32), ஜெகன் (47), சகோதரர்களான மகேந்திரன் (38), தியாகராஜன் (32) ஆகியோர் மான் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது.
இதனால் ஆத்தூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 6 பேரும் ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 130 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 142 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 176 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.61 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 76.70 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 75.78 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 37.88 டிஎம்சியாக உள்ளது.
- தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
- தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 ஆகும்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் - 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் - 04282-221704, ஆத்தூர் - 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி - 04282-232300, ஓமலூர் - 04290-220224, காடையாம்பட்டி - 04290-243569, மேட்டூர் - 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி - 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
- அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணராஜ் எலி மருந்து சாப்பிட்டு மயங்கினார்.
அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு எட்டு ரூபாய் உயர்ந்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 93 ரூபாய் இருந்த கறிக்கோழி விலை 101 ரூபாயாக உயர்ந்தது.
இதே போல முட்டை கோழி வளர்ப்போர் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் நடந்தது முட்டை கோழி விலை கிலோவுக்கு 1 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 78 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 77 ரூபாயாக குறைந்தது.
- சேலம் அருகே வேம்படிதாளம் பகுதியில் சேலையில் தீப்பிடித்து கருகிய மூதாட்டி சிகிச்சை பலியானார்.
- சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 65). இவர் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.
இதனால் உடலில் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






