என் மலர்
சேலம்
- ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
- கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
எனினும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியை வருகை அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் அண்ணா பூங்கா, படகு துறை மற்றும் காட்சி முனை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.
இது குறித்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கோடை விடுமுறை பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. எனவே சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஞாயிறு ஒருநாள் விடுமுறைக்காக ஏற்காடு வருபவர்கள் குறைந்துவிட்டனர்.
ஏற்கனவே மழைக்காலம் தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. எனவே ஏற்காடு வருவதை மக்கள் குறைத்துக் கொண்டனர் என்றனர்.
மேட்டூர்
மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொதுப் பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.
பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக வசூல் செய்ததில் ரூ.29880 கிடைத்தது.
- இன்று ஆடி 1-ந் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில், பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.
- ஆடி முதல் நாளான்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்.
சேலம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பிறப்பான 1-ம் தேதி சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் புதுமண தம்பதியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பெண் வீட்டிற்கு சென்று ஆடிப்பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும், புதுமணத் தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
இன்று ஆடி 1-ந் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில், பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், ஆடி முதல் நாளான்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும்.
இதையொட்டி சேலம் உழவர் சந்தை, பால் மார்க்கெட், தாதாகப்பட்டி கேட், உட்பட முக்கிய பகுதிகளில் அதிகளவில் அழிஞ்சி குச்சி தேங்காய், அவல், வெல்லம், நாட்டுக் சர்க்கரை, பழம் விற்பனை குவிக்கப்பட்டிருந்தன. இதன் விற்பனை நேற்று காலை முதலே களைக்கட்டியது. ஒரு குச்சி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். தேங்காயை தரையில் தேய்த்து, பின்னர் அதிலுள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு, அதற்குள் எள், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, அவல், உள்ளிட்டவைகளை நுழைப்பார்கள்.
பின்னர், அந்த தேங்காயை அழிஞ்சி மரக்குச்சியில் சொருகி நெருப்பில் சுடுவார்கள்.
சுட்ட அந்த தேங்காயை விநாயகருக்கு மற்றும் இதர கோவிலில் வைத்து படைய லிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி உண்பது வழக்கம்.
சேலம் மாநகரில் இன்று காலை முதலே பலர் தேங்காயை சுட்டு பண்டிகை உற்சமாக கொண்டாடினார். இதே போல் சேலம் மாவட்டம் முழுவதும் தேங்காய் சுட்டு பண்டிகையை பொதுமக்கள் உற்சமாக கொண்டாடி வருகின்றார்கள்.
இதையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தார்கள்.
- டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.
எடப்பாடி:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால், செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப் பேட்டை கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர் மின் கதவணை வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும் பம் குடும்பமாக வந்திருந்து விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும், இங்குள்ள நீர்மின் தகவணை பாலம், பஸ் நிலையம், கைலாசநாதர் கோவில் பஸ் நிலையத்தில் உள்ள பூங்கா, மூலப்பாதை பெருமாள் கோவில், மாட்டுக்கார பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- திருட்டு வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து, கடந்த மே 1-ந் தேதி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 8-வது பிளாக்கில் இருந்த இவர்களை, நிர்வாக வசதிக்கு டவர் பிளாக்குக்கு சிறை நிர்வாகம் நேற்று முன்தினம் மாற்றியது.
சேலம்:
கோவை சரவணம் பட்டியை சேர்ந்தவர்கள் பிரவீன் (வயது 25), அமர் நாத் (23), அஸ்வின்குமார் (24), பிரதீப் (22). இவர்களை திருட்டு வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து, கடந்த மே 1-ந் தேதி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
8-வது பிளாக்கில் இருந்த இவர்களை, நிர்வாக வசதிக்கு டவர் பிளாக்குக்கு சிறை நிர்வாகம் நேற்று முன்தினம் மாற்றியது. இதற்கு, கைதிகளின் நண்பர்களான சக கைதிகள் சோபன் (23), ராமன் (25), சங்கர் கணேஷ் (24), தீனா (24) ஆகியோர் நேற்று மதியம் 8-வது பிளாக் சுவர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து டியூப் லைட்டுகளை உடைத்து, உடலில் கீறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர்.
சிறை கண்காணிப்பாளர் வினோத் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
- நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர்.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். பள்ளி அருகே உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி வளாகம் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் உயிரிழந்தான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
மேட்டூர்:
மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
- மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவா சையை முன்னிட்டு ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேட்டூர் அருகே மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் விசேஷம் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
குறிப்பாக அமாவாசை நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்திரகாளி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம்.
- தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.
பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 500 கனஅடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 500 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 199 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 75.78 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 74.85 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 37.01 டி.எம்.சி.யாக உள்ளது.
- சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடம் பிடித்துள்ளார்.
- தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்ததாக மாணவி கிருத்திகா கூறியுள்ளார்.
சேலம்:
2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.
ஆசிரியர்கள், ஆசிரியைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்குவித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
- கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
- 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வானதிபட்டி பகு தியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்ப்பட் டது. இதையடுத்து கோவிந்த ராஜை சக தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்த ராஜ் பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து கோவிந்தராஜன் மனைவி சுகன்யா கொடுத்த புகார் பேரில் சூரமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இறந்து போன கோவிந்தராஜிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
- 2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
- 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்:
2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகை யான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றி ருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அரசு ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் 715 மதிப்பெண்களு டன் 3-ம் இடத்தையும், மாணவன் காவியரசு 705 மதிப்பெண்களுடன் 7-ம் இடத்தையும் பிடித்தனர்.
இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.
ஆசிரியர்கள், ஆசிரி யைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்கு வித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.






