என் மலர்tooltip icon

    சேலம்

    • பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகன உரிமை யாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

    இதனால் இந்த 93 வாகனங்கள் வருகின்ற 25-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

    வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவரை அவரது தாய் பாக்கியம் உள்பட உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தனியாக இருந்த அவர் விஷ இலையை அரைத்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதனை பார்த்த தாய் பாக்கியம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனி ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாப மாக இறந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கள்ளத்தொடர்பு

    அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    முற்றுகை

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உப கரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னை தொண்டு நிறு வனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார். அன்னை தொண்டு நிறுவன நிர்வாகி சி.ராதாசெல்வம் வரவேற்றார்.

    பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். செல்வம், க. சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். வனச்சரகர் திருமுருகன் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    வருவாய் ஆய்வாளர் நீதிபதி, சமூக ஆர்வலர் தும்பல் ஜீவா ஆகியோர், அன்னை அறக்கட்டளை சார்பாக, 10 மாணவ- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஸ்ரீதேவி வெங்க டேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுசீலா நன்றி கூறினார்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 199 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 142 கன அடியாக குறைந்துள்ளது,

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால்நீ ர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.

    நேற்று 74.85 அடியாக இருந்த நீர்மட்டம்இ ன்று காலை 73.90 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 36.14 டி.எம்.சியாக உள்ளது. 

    • ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
    • விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட காளைகளை தாரமங்கலம் சந்தைப் ேபட்டை பகுதியில் கட்டி வைத்து காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இங்கு நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கிய எருதாட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    எரு தாட்டத்தை காண பெரியாம்பட்டி புளிய மரத்து காடு நங்கிரிபட்டி ஏரிக்காடு சீராய் கடை மேட்டுக்காடு சிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்து பார்வையிட்டனர். எருதுகள் பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்த போது பெருமாள்.(60 )என்ற முதியவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஏற்காடு புறக்காவல் நிலையம் அருகில் ஏற்காடு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம்ரவி தொடங்கி வைத்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள ஏற்காடு புறக்காவல் நிலையம் அருகில் ஏற்காடு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பா ட்டத்தை தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம்ரவி தொடங்கி வைத்தார். ஆர்ப் பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு நடைபாதை வியாபாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு சட்ட உத்தரவு நடைமுறை படுத்த தவறிய ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஆகியோரை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    ஏற்காடு பகுதியில் அரசு கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கும் படித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி பொருளாதாரம் மேம்பாடு அடைய மத்திய மாநில அரசு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கொம்மக்காடு பட்டியல் இன மக்கள் சுடு காடு செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அப்பகுதி மக்களுக்கு மீட்டு தர வேண்டும்.

    தொழிலாளர் நல வாரி யத்தில் பதிவு செய்ய விரும்பும் நபர்களுக்கு பரிந்துரை செய்ய மறுக்கும் நாகலூர் கிராம நிர்வாக அலு

    வலர் சரவணன் மற்றும் மாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு பொறுப்பு ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ராஜேஷ், மூர்த்தி, ராஜா, ரகுராஜ், பிரபு மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • விசாரணையில் ஹரிபாபு அவரது செல்போனில் உள்ள அனைத்து நம்பர்களையும் அழித்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
    • ஊர்காவல்படை வீரர் ஹரிபாபு காதல் பிரச்சனையில் இருந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தம்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிபாபு (28). இவர் பி.எஸ்.சி பயோடெக் படித்துவிட்டு ஆத்தூர் ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு தூங்க சென்றார். அதிகாலை 5 மணிக்கு அவரது தந்தை முருகேசன் எழுந்து பார்த்தபோது ஹரிபாபு தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவர் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஹரிபாபு அவரது செல்போனில் உள்ள அனைத்து நம்பர்களையும் அழித்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்தது. ஊர்காவல்படை வீரர் ஹரிபாபு காதல் பிரச்சனையில் இருந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
    • ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகிர் பெரியம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது நவாப் ஜான். இவரது மகன் முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜாகிர் சின்னம்மா பாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
    • அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று, கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று

    நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறும்போது:-

    அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது.

    அதனால் அரசானை 149 விரைந்து செயல்படுத்தி நியமனத் தேர்வை நடத்த வழிவகை செய்யவேண்டும். நியமனத் தேர்வை ரத்து செய்தால் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை வெறுக்கும் அபாயம் உண்டாகும்.

    பிஜி டி.ஆர்.பி தேர்வினை போன்று எஸ்.ஜி.டி மற்றும் யூ.சி.டி.ஆர்.பி தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டிற்கு “தமிழ் நாடு ” என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
    • இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு " என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, நாளை காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணி நடைபெறகிறது.

    பெரியார் சிலை அருகே பேரணி தொடங்கி, திரு வள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவடைய வுள்ளது.

    தொடர்ந்து கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

    அதேபோன்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புப் புகைப்படக்கண் காட்சி அரங்கினை பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் நாளை முதல் 23-ந் தேதி வரை அமைக்கப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நீதிமன்ற உத்தரவுப்படி சரவணன், கலாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.
    • இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). பட்டதாரி ஆசிரியரான இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த எலசவாடி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலா.

    கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து பெற்று விட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி சரவணன், கலாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜீவனாம்சம் வழங்க ஆத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி, கலாவிடம் நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை சரவணன் வழங்கி உள்ளார். அந்த உத்தரவு உண்மையானதா? என அறிந்து கொள்ள, கலா ஆத்தூர் நீதிமன்றத்திற்கு சென்ற விசாரித்துள்ளார். அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனே கலா, ஆத்தூர் நீதிமன்றத்தில், போலி ஆணை பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து ஆத்தூர் ஜே.எம்.2 நீதிமன்ற ஊழியர் செல்வி, ஆத்தூர் டவுன் போலீசில் போலியான நீதிமன்ற உத்தரவு ஆணை தயாரித்து வழங்கியவர்கள் மீது புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் சரவணன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் இருக்க, போலி உத்தரவு ஆணையை தயாரித்து வழங்கியதும், இதற்கு ஆத்தூர் புனல்வாசல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (50) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த இருவரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் ஆசிரியர் சரவணன் மற்றும் தமிழ்செல்வனை கைது செய்தனர். 10 மாதத்திற்கு பின் சிக்கிய இருவரையும், விசாரணைக்கு பின் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    ×