என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் உரிமைத்தொகை 10 சதவீதம் விண்ணப்பம் விநியோகம்
- சேலம் மாவட்டத்தில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் அதை பூர்த்தி செய்து வழங்கு வதற்கான முகாமுக்கு வருவதற்கான டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
- சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனியில், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை அதிகாரி கள் ஆய்வு
சேலம்:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோ றும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித் துள்ளது. தகுதியானவர் களுக்கு உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கும் வகையில், வழங்கப்படு கின்றன.
சேலம் மாவட்டத்தில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் அதை பூர்த்தி செய்து வழங்கு வதற்கான முகாமுக்கு வருவதற்கான டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனியில், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை அதிகாரி கள் ஆய்வு செய்துகூறியதாவது:
இத்திட்ட த்தில் பயன்பெற சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 846 ரேசன்கடை பணியாளர்கள் 6 லட்சம் கார்டுதாரர்களுக்கு வழங்கப் படுகிறது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 700 ரேசன்கடை பணியாளர்கள் 5 லட்சம் ரேசன்கார்டுகளுக்கு முகாம் நடை பெறும். இதில் நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, டோக்கன் மற்றும் விண்ணப் பங்களை வீடு, வீடாகச் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குகின்றனர். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள். அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், தங்களுக்கான ரேஷன் கடைக்குச் சென்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் விண்ணப்பம் ஆகியவற்றுடன் வழங்க வேண்டும் என்றனர்.
முதல் நாளான ஒரே நாளில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 10 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 2-வது நாளாக விண்ணப்பம் வழங்கப் பணி நடைபெற்று வருகிறது.






