என் மலர்tooltip icon

    சேலம்

    • ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-13351) ரெயிலில் தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    ரகசிய தகவல்

    இந்த நிலையில் இன்று அதிகாலை தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து சப் -இன்ஸ் பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் இசையரசு, முனுசாமி ஆகியோர் பொம்மிடி ெரயில் நிலையத்திற்கும், சேலம் ெரயில் நிலையத்திற்கும் இடையே அந்த ரெயில் வந்தபோது, அதில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொதுபெட்டியில் கருப்பு நிற பை கேட்பாரற்று கிடந்தது.

    4½ கிலோ கஞ்சா

    இந்த பையை சோதனை செய்ததில் 4½ கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றி விசாரணை செய்ததில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியாததால் 4½ கிலோ கஞ்சாவையும் சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ேசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலில் வடமாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தல் தொடர்கதை ஆகி வருகிறது. இதுபோன்று பிடிக்கப்படும் பை எந்த ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்து கஞ்சா கடத்தும் பிரதான கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி.
    • இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (55). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தொழிலாளி சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

    • ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் அருகே செயில் பேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது.
    • தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கேட்டால் அதனை சரி பார்த்து கொடுக்கும் வகையில் ஆடிட்ட ர் சிவகுரு என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் அருகே செயில் பேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கேட்டால் அதனை சரி பார்த்து கொடுக்கும் வகையில் ஆடிட்ட ர் சிவகுரு என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெண் ஆடிட்டர்

    அவரது அலுவலகத்தில் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கிருத்திக்ராஜ் என்பவரது மனைவி சிந்துஜா (35) என்பவர் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். அங்கு வேலை பார்த்த 11 தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை கேட்டு விண்ணப்பம் செய்ததாக அவர்களுக்கு 27 லட்சத்து 24 ஆயிரம் 318 காசோலை போடப்பட்டு வழங்கப்பட்டது.

    ஆனால் விசாரணை நடத்திய போது 11 பேரும் பணம் கேட்டு விண்ணப்பமே செய்யவில்லை என்பதும், அவர்களுக்கான காசோலையை சிந்துஜா அதே பெயர் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து பின்னர் அந்த பணத்தை வசூல்செய்ததும் தெரிய வந்தது.

    அதிகாரிகள் தொடர்பு

    இந்த காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளான ஸ்ரீதரன், உமேஷ் ஆகியோர் அதில் கையெழுத்திட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சேலம் கோர்ட் உத்தரவின் பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சிந்துஜாவை கைது செய்தனர்.

    மேலும் இந்த கையாடலில் தொடர்பு உள்ள வர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே காசோலைகளில் கையெழுத்திட்ட அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை.
    • அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் நியாயமாக செயல்படக்கூடியவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கேட்பவர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை உண்மையான கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

    இந்த விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை சரியாக செயல்படவில்லை. முதலமைச்சர் படம் சித்தரிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறது. செந்தில் பாலாஜி ஆபரேஷன் செய்த பிறகு அவரது போட்டோக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்திலும் அவரை வெளியில் காண்பிக்காத வகையில் போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்த சோதனை நடந்திருக்கிறது.

    அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.
    • கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அணையில் குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம் 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை இன்னும் சரிவர பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.94 அடியாக குறைந்தது.

    அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை திறக்கப்பட்ட நாளில் 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 37 நாட்களில் 31 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் வலதுகரை மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் காவிரி டெல்டா பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • 5-வது பிளாட்பார்மில் ரெயில் வரும் என்று ரெயில்வே போர்டில் அறிவித்த நிலையில் திடீரென ரெயில் 3-வது பிளாட்பார்முக்கு வந்தது.
    • 3 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று விட்டு புறப்பட்டு சென்றதால் பெண்கள் குழந்தைகளால் ஓடி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக தினசரி ஆலப்புழா-தன்பாத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வழக்கமாக சேலம் ரெயில் நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வந்து 3 நிமிடங்கள் நின்று செல்லும். நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்ய 100-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    5-வது பிளாட்பார்மில் ரெயில் வரும் என்று ரெயில்வே போர்டில் அறிவித்த நிலையில் திடீரென ரெயில் 3-வது பிளாட்பார்முக்கு வந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் தண்டவாளத்தில் ஓடி சென்று தன்பாத் ரெயிலில் ஏறினர். 3 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று விட்டு புறப்பட்டு சென்றதால் பெண்கள் குழந்தைகளால் ஓடி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    இதையடுத்து ரெயில் பயணிகள் ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு சென்று ரெயிலை ஏன் மாற்றி இயக்கினீர்கள் என்று கேட்டனர். அதற்கு முறையாக பதில் செல்லாத அதிகாரிகள் அங்கிருந்து அவர்களை விரட்டி விட்டனர். தொடர்ந்து அறிவிப்பு அலுவலகத்தில் இருந்தவர்களை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பயணிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் திடீர் அறிவிப்பால் ரெயில் தண்டவாளம் மாறி வந்ததாக தெரிவித்தனர். பின்னர் சென்னை செல்ல இருந்த பயணிகளை கோவை ரெயிலிலும், வடமாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் ரப்திசாகர் எக்ஸ்பிரசிலும் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சேலம் ரெயில் நிலையத்தல் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கோவிந்த ராஜ். இவரது மகன் லோகேஷ் (25). இவர் உடலில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார்.
    • சிறுமியுடன் பழகிய லோகேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் திருமலைகிரியை அடுத்த வேடுகாத்தம்பட் டியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ். இவரது மகன் லோகேஷ் (25). இவர் உடலில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு உறவினர் முறையில் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள் ளார். அப்போது சிறுமியுடன் பழகிய லோகேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    போக்சோவில் கைது

    இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் போலீசார், நேற்று லோகேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிச்சாமி (58). இவர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி கொண்டப்பநாயக்கன்பட்டி புதிய காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ராகினி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இவர், ஆடி அமாவாசையையொட்டி மொபட்டில் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு டால்மியா போர்டு செட்டிச்சாவடி வழியாக கன்னங்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ

    இடத்திற்கு சென்று சுப்பிர மணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை கைதிகள் 3 பேரையும் சிறை நிர்வாகம் சார்பில் 8-வது பிளாக்கில் இருந்து நிர்வாக வசதிக்காக டவர் பிளாக் பகுதிக்கு மாற்றினர்.
    • இதற்கு அவரது நண்பர்களான 3 கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மத்திய சிறையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த அஸ்வின்குமார் (29), சங்கர்கணேஷ் (22), பிரவீன் (25) ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்களது நண்பர்களான சோபன் (23), ராமன் (25) தீனா (25) ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோவை கைதிகள் 3 பேரையும் சிறை நிர்வாகம் சார்பில் 8-வது பிளாக்கில் இருந்து நிர்வாக வசதிக்காக டவர் பிளாக் பகுதிக்கு மாற்றினர்.இதற்கு அவரது நண்பர்களான 3 கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இவர்கள் டியூப் லைட்டுகளை உடைத்து உடலில் கீறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர்.

    போலீசில் புகார்

    இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் மதிவாணன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 கைதிகளையும், உறவினர்கள் 3 மாதம் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • முருகன் (வயது 34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது கியாஸ் ஏஜென்சியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
    • இதையடுத்து முருகன் பலரிடம் கடன் வாங்கி ரூ.2½ லட்சம் வரை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது கியாஸ் ஏஜென்சியில் கியாஸ் சிலிண்டர் வினி யோகம் செய்யும் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் கடைகளுக்கு வர்த்தக சிலிண்டர்கள் வினியோகம் செய்ததில் ரூ.3½ லட்சம் வரை கடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து முருகன் பலரிடம் கடன் வாங்கி ரூ.2½ லட்சம் வரை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து முருகன் வழக்கம்போல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் உரிமை யாளர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் விஷம் குடித்தார். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    உருக்கமான கடிதம்

    தற்கொலை செய்து கொண்ட முருகன், என்னுடைய மரணத்திற்கு உரிமையாளர் தான் காரணம். அவர் பணத்தை கட்ட சொல்லி தினமும் கூறியதால் மன உளைச்சல் அடைந்ததாக அதில் கூறியிருந்தார். இதையடுத்து முருகனின் உறவினர்கள் சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

    • முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி ரோடு செல்லும் வழியில், முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×