மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி

மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி
Published on

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த தனியார் ஆம்புலனஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இது குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com