என் மலர்tooltip icon

    சேலம்

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது.
    • இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது. இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    2 கட்டம்

    முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது . 2-ம் கட்டமாக 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதை தொடர்ந்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வழங்க வேண்டும். மகளிர் உரிமை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க மாவட்டத்தில் 10 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஆய்வு

    இதற்கிடையே டோக்கன் வழங்கும் பணியை முதல் கட்டமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கன்னங்குறிச்சியில் இன்று காலை ஆய்வு செய் தார். அப்போது டோக்கன் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • தி.மு.க அரசை கண்டித்து இன்று காலை சேலம் கலெக்டர் அலுவல கம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலா ளர் ஜி.வெங்கடாஜலம் வர வேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காய்கறி விலை உயர்வு மற்றும் அத்தியா வசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வையும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து இன்று காலை சேலம் கலெக்டர் அலுவல கம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலா ளர் ஜி.வெங்கடாஜலம் வர வேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி கலந்து கொண்டு ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தக்காளி வெங்காயம் முருங்கைக்காய் வாழைக்காய் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். முதல்- அமைச்சருக்கு விலைவாசி உயர்வை பற்றி எந்த கவலையும் இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டையில் ஒரு பெண் இன்று காலை படு கொலை செய்யப்பட்டுள் ளார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகளிர் உரிமை தொகைக்கு தற்போது விண்ணப்பங்கள் தான் வழங்கப்படுகின்றன. இதில் தகுதியானவர்கள் பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அனைவருக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ள வில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவகுமார் அருகில் தமிழக முதல்-அமைச்சர் பெங்க ளூரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். இதனை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

    தமிழக மக்கள் அனை வரும் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பாலசுப்பிர மணி, ராஜாமுத்து, சித்ரா, ஜெயசங்கரன், நல்லதம்பி, மணி, சுந்தர்ராஜன், அவைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்வராஜூ, ரவிச்சந்தி ரன், சக்திவேல், மனோன் மணி, வெற்றிவேல், பல்பாக்கி கிருஷ்ணன், ராஜா, சின்னதம்பி, மாதேஸ்வரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்க டாசலம், பகுதி செயலாளர் பாலு, மாரியப்பன், சரவ ணன், முருகன், யாதவ மூர்த்தி, ஜெயபிரகாஷ் சண்முகம், பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜீ, வையாபுரி, பொதுக்குழுஉறுப்பினர் பட்டு ராமச்சந்திரன், ஜான் கென்னடி, பேரவை செயலாளர் சரவணமணி, இணைச் செயலாளர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அசோக்குமார், தலைவர் அருள்ராம், இணைச் செயலாளர் ஜிம் ராமு, வக்கீல் பிரிவு செயலாளர் வீரக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு வக்கீல் கனகராஜ், முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், வர்த்தக அணி ராம்ராஜ், சாம்ராஜ், ஜெகதீஷ்குமார், உமாராஜ், சரோஜா, பாமா கண்ணன்,

    கூட்டுறவு வங்கிதலை வர்கள் வே பிரிட்ஜ் ராஜேந்திரன், கர்ணன், கண்ணன், கவுன்சிலர்கள் கே.சி. செல்வராஜ், ஜனார்த் தனன், சந்திரா கிருபாகரன், மோகனப்பிரியாசிவகுமார், வட்டச் செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், பிர காஷ், செந்தில்குமார், மார்க்க பந்து, விநாயகம், ரஞ்சித், ஜெகதீஷ், தங்கராஜ், ஸ்ரீதர் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரவீன்குமார், ரமளிசக்தி, தினேஷ், அன்பு, சந்துரு, சகாயம், கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்ற பெண்கள் காய்கறி கூடைகளை சுமந்த படியும் கையில் பதாகைகளை ஏந்திய படியும் பங்கேற்றனர்.

    • காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.

    இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற நிறுவனம் சேலம் பேர்லேண்ட்ஸ் கணேஷ் டவர்ஸ், என்ற முகவரியில் தலைமையிட மாக கொண்டு இயங்கி வந்தது.
    • மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணையில் இதுவரை பாதிக்கப்பட்ட 1095 முதலீட்டாளர்களி டமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    போலி கூட்டுறவு சங்கம்

    அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற நிறுவனம் சேலம் பேர்லேண்ட்ஸ் கணேஷ் டவர்ஸ், என்ற முகவரியில் தலைமையிட மாக கொண்டு இயங்கி வந்தது. இந்தநிறுவனம் பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி தி்ட்டங் களை கூறி ஆசையை தூண்டி பல திட்டங்களில் முதலீடு பெற்றதாகவும், அதில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெயவேல், ஸ்தாபகர் தங்கபழம், பொதுமேலாளர் பிரேம் ஆனந்த், இயக்குனர் சரண்யா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    புகார்கள்

    மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணையில் இதுவரை பாதிக்கப்பட்ட 1095 முதலீட்டாளர்களி டமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    சென்னை பொருளாதார குற்றப்பிரிவு

    மேலும் மீதமுள்ள பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் வருகின்ற 22-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மேற்கு மண்டலம், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் புகார்கள் பெறப்பட உள்ளதால், இதுவரை சேலம் பெருளா தார குற்றப்பிரிவில் புகார் கொடுக்காத பாதிக்கப் பட்ட முதலீட்டா ளர்கள் சேலம் மாநகரம், காவல் ஆணையர் அலுவலகம் அருகிலுள்ள, லைன் மேடு, காவலர் சமுதாய கூட்டத்தில் புகார் மனுக்களை நேரில் வந்து கொடுக்குமாறு அறி விக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திறன்மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.

    இலவசம்

    பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐடிஐ படித்தவர்களாக இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40-க்குள் இருத்தல் வேண்டும்.

    இதில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

    சான்றிதழ்

    ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது, தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

    பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் மேம்பாடடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தொடங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட, தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    நேற்று வினாடிக்கு 176 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் குறைந்து வருகிறது.

    நேற்று 72.94 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 71.96 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 34.40 டி.எம்.சி.யாக உள்ளது.

    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றிரவு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அந்த பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் தேடினர்.

    அப்போது அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் முட்புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    ஆம்னி பஸ் மோதியது

    அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொழிலதிபர் எஸ்.டி சக்திவேல் ஒரு மனதாக தேர்வு பெற்றார்.
    • இன்று காலை கோட்டை மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொழிலதிபர் எஸ்.டி சக்திவேல் ஒரு மனதாக தேர்வு பெற்றார்.

    அவர் இன்று காலை கோட்டை மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா சுரேஷ்குமார் ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ பூங் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில் மேயர் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பி. முருகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரவேல், செயற்குழு கே.டி மணி, பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, பிரகாஷ், தமிழரசன், ஜெகதீஷ் மாநக ரத் துணைச் செயலாளர் எஸ்.டி குமார், பொதுக் க்குழு உறுப்பினர் சத்யா குமார், த.மா.கா மாவட்ட தலைவர் உலக நம்பி, மாநில இணைசெயலாளர் சின்னதுரை மற்றும் கோவில் இணை ஆணை யர் சபர்மதி, செயல் அலுவலர் அமுதசுரபி, உதவி ஆணையர் ராஜா ஆய்வாளர் உமா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் துரைசாமி, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை உயிர் வேதியியல் துறை தலைவர் பமீலா கிறிஸ்துதாஸ்

    கலந்து கொண்டு ஆய்வக துறையில் நவீன முறைகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    இதில், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

    பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்களால், சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படும் நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

    இந்த கருத்தரங்கில் சங்க இணை செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கலா, சேலம் மாவட்ட தலைவர் நிஷார் அகமது, செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கோதைநாயகி (27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடினார். அப்போது குறிப்பிட்ட ஒரு முகவரியிலிருந்து வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்பி உள்ளனர்.
    • இதை உண்மை என்று நம்பிய கோதைநாயகி அந்த லிங்க்கில் தனது வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாரமங்கலத்துப்பட்டி லட்சுமிநகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கோதைநாயகி (27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடினார். அப்போது குறிப்பிட்ட ஒரு முகவரியிலிருந்து வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்பி உள்ளனர். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்து தகவல்களை அளிக்கும்படி கேட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய கோதைநாயகி அந்த லிங்க்கில் தனது வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் ஆன்லைனில் தெரிவித்தபடி குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் 13 லட்சத்து 91ஆயிரத்து 74 ரூபாய் செலுத்தி உள்ளார். அதற்கு பின்பு அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதைநாயகி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்காளி, பருப்பு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக ம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பாக தக்காளி, பருப்பு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக ம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தக்காளி, வெங்காயம், உள்ளிட்டவைகளை மாலையாக அணிவித்தும் பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×