search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In jail"

    • முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.
    • அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கண்ணந்தேரி அடுத்த கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து மகுடஞ்சாவடியை சேர்ந்த அய்யண்ணன், அவரது மகன் ஜெகன் மூலம் மகுடஞ்சாவடி பழைய சந்தைப்பேட்டையை சேர்ந்த நிலத்தரகர்களான கோபால கண்ணன் (53), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் அறிமுகமாகினர்.

    ரூ.55 லட்சம்

    இவர்கள் மகுடஞ்சாவடி அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள 1.47 ஏக்கர் நிலத்தை தாங்கள் கிளை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி ரூ.55 லட்சத்திற்கு விலை பேசினர்.

    பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தின் உரிமையாளர் நடராஜன் மூலம் முத்துசாமி, அவரது உறவினரின் மனைவி லதா ஆகியோர் பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர்.

    இந்த கிரையத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட கோபாலகண்ணன் சார்பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரத்தை பெற்றுக்கொண்டு முத்துசாமியிடம் கிரையம் செய்யப்பட்ட நிலத்திற்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறி ரூ.75 ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.

    மிரட்டல்

    இந்த நிலையில் முத்துசாமி, லதா தரப்பினர் கோபால கண்ணன், சரவணன் ஆகியோரிடம் வழங்கிய அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் மனு அளித்தார்.

    சிறையில் அடைப்பு

    இதுகுறித்து விசா ரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு கோபால கண்ணன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். 

    • 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர், 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோவிந்தராைஜ கைது செய்தனர். கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சேலம் மத்திய ெஜயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார், பலத்த பாதுகாப்புடன் கோவிந்தராஜை அழைத்துச் சென்று சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • ஓமலூர் அருகே போதை பொருள் கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    • விசாரணையில் போதை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் பெங்களூர் சென்று வாங்கி பலமுறை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ், பான்பராக் மற்றும் போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை ஓமலூர் போலீசார் கண்காணித்து அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஹான்ஸ், கூல் லிப்ஸ், போதை பாக்குகள், நிக்கோடின் போன்ற பொருட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓமலூர் போலீசார் விமான நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி சோதனை செய்யும்போது, அங்கே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், மோட்டார் சைக்கிளை திருப்பி செல்ல முற்பட்டார். அவரை போலீசார் விரட்டும்போது, மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு, தப்பியோடி சென்றார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள் கட்டி வைக்கபட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்த போது நான்கு மூட்டைகள், இரண்டு பைகளில் ஹான்ஸ், போதை பாக்குகள், மற்றும் போதை வஸ்துகள் இருந்தன. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    பின்னர் மூட்டைகளை ஆய்வு செய்தபோது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, தப்பியோடிய நபரை தேடி வந்தனர்.

    கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து சேலம் அம்மாபேட்டையில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த அவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் பெங்களூர் சென்று வாங்கி பலமுறை கடத்தி வந்தது தெரிய வந்தது.அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×