search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியநிலத்தரகர்கள் 2 பேர் ஜெயிலில் அடைப்பு
    X

    கோபால கண்ணன், சரவணன்

    ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியநிலத்தரகர்கள் 2 பேர் ஜெயிலில் அடைப்பு

    • முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.
    • அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கண்ணந்தேரி அடுத்த கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து மகுடஞ்சாவடியை சேர்ந்த அய்யண்ணன், அவரது மகன் ஜெகன் மூலம் மகுடஞ்சாவடி பழைய சந்தைப்பேட்டையை சேர்ந்த நிலத்தரகர்களான கோபால கண்ணன் (53), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் அறிமுகமாகினர்.

    ரூ.55 லட்சம்

    இவர்கள் மகுடஞ்சாவடி அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள 1.47 ஏக்கர் நிலத்தை தாங்கள் கிளை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி ரூ.55 லட்சத்திற்கு விலை பேசினர்.

    பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தின் உரிமையாளர் நடராஜன் மூலம் முத்துசாமி, அவரது உறவினரின் மனைவி லதா ஆகியோர் பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர்.

    இந்த கிரையத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட கோபாலகண்ணன் சார்பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரத்தை பெற்றுக்கொண்டு முத்துசாமியிடம் கிரையம் செய்யப்பட்ட நிலத்திற்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறி ரூ.75 ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.

    மிரட்டல்

    இந்த நிலையில் முத்துசாமி, லதா தரப்பினர் கோபால கண்ணன், சரவணன் ஆகியோரிடம் வழங்கிய அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் மனு அளித்தார்.

    சிறையில் அடைப்பு

    இதுகுறித்து விசா ரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு கோபால கண்ணன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×