4 திருநங்கைகள் சிறையில் அடைப்பு

சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த திரு நங்கைகள் அவரிடம் நைசாக பேசி அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.4,800 பணம் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
4 திருநங்கைகள் சிறையில் அடைப்பு
Published on

சேலம்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அத்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமிர்த லிங்கசிவா(42). இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த திருநங்கைகள் அவரிடம் நைசாக பேசி அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.4,800 பணம் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

இதுகுறித்து அமிர்தலிங்கசிவா, பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அதில், அமிர்தலிங்கசிவாவிடம் பணம், செல்போனை பறித்தது. திருநங்கைகளான செம்பா (23), கனிஷ்கா (24),லீலா (21), அக்ஷரா (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com