என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraudulent female auditor"

    • மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் அருகே செயில் பேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது.
    • தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கேட்டால் அதனை சரி பார்த்து கொடுக்கும் வகையில் ஆடிட்ட ர் சிவகுரு என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் அருகே செயில் பேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கேட்டால் அதனை சரி பார்த்து கொடுக்கும் வகையில் ஆடிட்ட ர் சிவகுரு என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெண் ஆடிட்டர்

    அவரது அலுவலகத்தில் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கிருத்திக்ராஜ் என்பவரது மனைவி சிந்துஜா (35) என்பவர் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். அங்கு வேலை பார்த்த 11 தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை கேட்டு விண்ணப்பம் செய்ததாக அவர்களுக்கு 27 லட்சத்து 24 ஆயிரம் 318 காசோலை போடப்பட்டு வழங்கப்பட்டது.

    ஆனால் விசாரணை நடத்திய போது 11 பேரும் பணம் கேட்டு விண்ணப்பமே செய்யவில்லை என்பதும், அவர்களுக்கான காசோலையை சிந்துஜா அதே பெயர் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து பின்னர் அந்த பணத்தை வசூல்செய்ததும் தெரிய வந்தது.

    அதிகாரிகள் தொடர்பு

    இந்த காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளான ஸ்ரீதரன், உமேஷ் ஆகியோர் அதில் கையெழுத்திட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சேலம் கோர்ட் உத்தரவின் பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சிந்துஜாவை கைது செய்தனர்.

    மேலும் இந்த கையாடலில் தொடர்பு உள்ள வர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே காசோலைகளில் கையெழுத்திட்ட அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    ×