என் மலர்
ராணிப்பேட்டை
- மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை.
- சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று காலை அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தில் தி.மு.க. வினர் தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத அரக்கோணம் டி.எஸ்.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும் கல்லூரி மாணவி குற்றச்சாட்டு.
- பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ளார். தெய்வச்செயலுக்கு பதிலாக கவியரசு அப்பதவியில் நியமிக்கப்படுவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவி ஒருவர், தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும், பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சென்னை டிஜபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அத்துடன் இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார் சென்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த நிலையில்தான் தெய்வச்செயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு.
- 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது கல்லூரி மாணவி வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னை குற்றவாளிகள் போல் காவல்துறை நடத்துகின்றன. அரசியல் தலையீடு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார். இதில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மாணவி தெரிவித்தார்.
மாணவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில்,
* அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு
* 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* 20 வயதுள்ள பெண்கள் 20 பேர் பாதிப்பு என்று கூறும் பெண் அவர்களை பறறிய தகவல்களை கூறவில்லை.
* அரசியல் பிரமுகரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
- என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
- இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி மாணவி திடீரென உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.
மேலும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய முகத்தை பதிவிட்டுள்ளதை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பயன் இல்லாமல் போனது.
பாதிக்கப்பட்ட நான் இதுபோன்ற நபர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் பெண்களுக்கு தைரியத்தை வரவழைக்கவே புகார் கொடுத்தேன். ஆனால் தற்போது என்னை போலீசார் கோழை ஆக்கிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
- கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகள் புவனேஷ்வரி (26)-க்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
பாலுவின் வீட்டின் எதிரில் அவருடைய உறவினர் விஜய் (26) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். புவனேஸ்வரிக்கும், விஜய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். மேலும் அவர் கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மனைவி பிரிந்து சென்றதால் பாலுவுக்கு குடிப்பழக்கம் அதிகரித்தது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மனைவி இல்லாமல் தவித்தார் .
நேற்று இரவு அவர் அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து கீழ் புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பாலுவின் மாமியார் பாரதி (45) தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு கத்தியால் அவருடைய மாமியாரை வெட்ட முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி அவரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். பாலு அவரை விரட்டி சென்று தலை மற்றும் பின்பக்க கழுத்து ஆகிய இடங்களில் மாறி மாறி வெட்டினார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனைக் கண்ட பாலு அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பாலுவுக்கு ஆத்திரம் தீரவில்லை. மனைவியின் பிரிவுக்கு காரணமான விஜயையும் வெட்டிக்கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
இதனையடுத்து புதுப்பேட்டையில் இருந்து அவருடைய சொந்த ஊரான புதுக்குடியானூர் கிராமத்திற்கு வந்தார்.
அப்போது வாலிபர் விஜய் வீட்டில் இல்லை. அவர்கள் அதன் அருகில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். அங்கு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பாலு அங்கு விஜயை தேடி சென்றார்.
அப்போது விஜயின் தந்தை அண்ணாமலை (60) அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரம் அடைந்த பாலு இரும்பு கம்பியை எடுத்து அண்ணாமலையின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அண்ணாமலையின் மனைவி ராஜேஸ்வரி (55) வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாலு அவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தார்.
ஒரே நாளில் மாமியார் மற்றும் உறவினர் 2 பேரை கொலை செய்த பாலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா மற்றும் கொண்டபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை வாலாஜா போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலு கீழே விழுந்தார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் பாலுவை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது.
- இரண்டு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்.
ராணிப்பேட்டை:
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். முன்னதாக ராணிப்பேட்டையில் தனியார் விடுதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிற பதிலடி தாக்குதலை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேரணி அறிவித்துள்ளார். இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இருக்கிறோம். பயங்கரவாதம் துடைத்தெறியப்பட வேண்டும்.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தும் பேரணி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டும்தான். அ.தி.மு.க. கூட்டணி உறுதி பெறவில்லை. கூட்டணி அமைத்துக் கொண்டதாக சொன்னாலும் அது இன்னும் உறுதி பெறவில்லை.
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு பொதுமக்களின் பேராதரவும் வழக்கம் போல் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும் .
எல்லோரும் இந்தி படிப்பதற்கு ஏதுவாக அமையும் . ஆகவே உச்ச நீதிமன்றம் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார்கள். அப்படி ஆணையிட முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை உயர்த்தி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான். மண்ணின் மைந்தர்கள் தான். அவர்களுக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்புடையதல்ல.
இஸ்லாமியர்களும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை வரவேற்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது வேறு, 2 நாடுகளுக்கு இடையே போர் என்பது வேறு. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்.
2 நாடுகளுக்கு இடையேயான போராக இது மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ்கர்ணா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது.
- உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
அரக்கோணம்:
சென்னை, கொரட்டூர் அடுத்த பள்ளத்தெரு, கோபாலகிருஷ்ண நகரைச் சேர்ந்தவர் முத்துக்கு மாரசாமி. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 60).
கணவன், மனைவி இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். கடந்த 2-ந் தேதி அங்கிருந்து சென்னை செல்வதற்காக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும் ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்றது.
அப்போது அதில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் செயினைப் பறித்தார். உடனே ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பால சரஸ்வதி அலறி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து பால சரஸ்வதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதில் மெரூன் கலர் நிறமுடைய டீ சர்ட், பேண்ட், கருப்பு பைகள் வைத்திருந்த வாலிபர், பால சரஸ்வதியிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மத்திய அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அமித் ஷா உரையாற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) செயல்பட்டு வருகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (மார்ச்07) CISF-ன் 56வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க.வினர் சார்பில் அமித் ஷாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வரவேற்பு போஸ்டர்களில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே சிலமுறை பா.ஜ.க. போஸ்டர்களில் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரர்களின் எழுச்சி தின கொண்டாட்டத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வர உள்ளார்.
- ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள்.
- மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை வந்துவிட்டது. அதனை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனை எதிர்ப்பதில் அரசுக்கு உறுதி கிடையாது. என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்.
மக்களின் வாழ்க்கையை பறிப்பதற்காக முதல்வர் மருந்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதுதான் அது தேவைப்படுகிறதா ஏன் இதுவரை மக்களுக்கு நோய் வரவே இல்லையா.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். செல்வது அவர்கள் சொந்த விருப்பம்.
எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது. வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள். யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து அப்பா (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய முதல்வர் ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறார். அரசுக்காக அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை. எல்லாத்தையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள்.
மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியைக் கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்.
அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் உள்ளது. அவர்கள் அரசு அழைத்து பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.
- பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.
நா.த.க. சார்பில் பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* பெரியார் குறித்த விமர்சனம் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எட்டும்.
* நா.த.க. கொள்கைக்கு எதிராக முன்னுக்குப்பின் முரணாக சீமான் பேசுகிறார்.
* பெரியாரை தமிழ் தேசியத்துக்கு எதிராக சீமான் முன்னிறுத்துவது பேராபத்து.
* நா.த.க.வை வீழ்ச்சி பாதையை நோக்கி இழுத்து செல்கிறார் சீமான்.
* பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.
சீமானின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஏற்க முடியாததால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ள நிலையில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.






