என் மலர்
ராமநாதபுரம்
- கண்மாய்கள், குளங்கள் வறண்டதால் அபிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவ மழை யை நம்பி நெல், மிளகாய் பருத்தி. மற்றும் சிறுதானி யங்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தனர் .
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அபிராமம், கமுதி பகுதியை சுற்றியுள்ள நீர்வழித்தடங் களான மலட்டாறு, குண்டாறு.பரளையாறு கிருதுமால் நதி நீர்நிலை கால்வாய்களும் தண்ணீர் வராததால் வறண்டு காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது.
தற்போது உள்ள சூழ் நிலையே தொடருமானால் பருவமழை தொடங்குவதற்கு முன் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.5400 அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர் 98 ஆயிரத்து 314 ஹெக்டேரிலும், மக்கா சோளம் 40 ஹெக்டேரில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய வறட்சி நிவாரணமாக ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதியாக கோரப்பட்டு உள்ளது.
கடந்த 2022-23ம் ஆண்டில் சம்பா பருவத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 859 எக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. வட கிழக்கு பருவ மழை -2022ல் குறைவாக பெய்துள்ளதால் அறுவடை நேரத்தில் நெல், மக்கா சோளப்பயிர்கள் மகசூல் பாதிப்படைந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் வருவாய்த் துறை, வேளாண்துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுத்தனர். இதில் நெல்- 98 ஆயிரத்து 314 ஹெக்டேரும், மக்காச்சோளம் - 40 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீட்டுத்தொகை ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதி கோரி அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிக்கை அனுப்பினர்.
தொடர்ந்து விவசாய சங்கங்கள் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் விளை வாக 2022ம் ஆண்டு பேரி டர் மேலாண்மை, மழை குறைவால் 33 சதவீதத்திற்கு மேலாக பயிர் தேசம் ஏற்பட்ட ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங் ளை மிதமான வேளாண் வறட்சி' என அரசு நிவாரணம் வழங்க ஆணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 வட்டாரங் களுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5400 வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
- காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
- பெண்கள் கோவில் முன்பாக கூடி அம்மன் புகழ் பாடி கும்மி கொட்டினர்.
தொண்டி
தொண்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபி ஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே போல் பரிவார தெய்வங்களான விநாயகர் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. அப்போது ஏராள மான பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வல மாக வந்து அம்மனுக்கு மலர்களால் பூஜை செய்தனர். முன்னதாக ஏராளமான பெண்கள் கோவில் முன்பாக கூடி அம்மன் புகழ் பாடி கும்மி கொட்டினர்.
- 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.
- அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ராமநாதபுரம்
முதுகுளத்துார் கந்தசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லதா (25). இவர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-
அருண்குமாரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்தேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு தொல்லை செய்தார். அதன் பிறகு நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அப்போது அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து கேட்டால் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.
முதுகுளத்தூர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பேரூராட்சிகள்ஆகியவற்றின் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 14 பொருட்கள் கொண்ட சமையல் பொருட்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.
- இமானுவேல் சேகரனார் குறித்து அவதூறு பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.
கீழக்கரை
தேவேந்திரகுல இன மக்கள் தெய்வமாக வணங் கும் தியாகி இமானுவேல் சேகரனாரை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைப்பின் சார்பில் அந் தந்த மாவட்ட நிர்வாகி–கள் புகார் கொடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறு–வனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரையை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-
கடந்த இரண்டு நாட்க–ளாக சமூக வலைத்தளங்க–ளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி என்ப–வர் உசிலம்பட்டியில் நடை–பெற்ற ஒரு கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வரும் தியாகி இமானுவேல் சேகர–னாரை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.
இவர் பேசிய பேச்சால் தென் மாவட்டங்களில் இணக்கமாக இருந்து வரும் சமூகங்களுக்கு மத்தியில் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முருகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மக்கள் மத்தி–யில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாத–புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.
இங்கு மட்டுமின்றி எங் கள் அமைப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி–லும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி–னார்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருதகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை, கிழக்கு மாவட்ட தலைவர் சபா, மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- கமுதியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று பேரூ–ராட்சி துப்புரவு பணியாளர் கள், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 200 பேருக்கு பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
5 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டன. மேலும் அரசு மருத்து–வமனையில் நோயாளிக–ளுக்கு பழம் மற்றும் பிரட் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச் சியில், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு–தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், நகரச் செயலாளர் பாலமுரு–கன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, காங்கிரஸ் கட்சியின் வடக்கு வட்டார தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, மாரிமுத்து,
உதயகுமார், முதுகுளத் தூர் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள் சத்திேயந் திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
- சாயல்குடி பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
சாயல்குடி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன் னிட்டு ராமநாதபுரம் மாவட் டம் சாயல்குடி பேரூராட்சி–யில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், கடலாடி அரசு மருத்துவம–னையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் கதர்கிராம வளர்ச்சி நல வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் 1,500 நபர்க–ளுக்கு 5 கிலோ அரிசி மற் றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டது.
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவ–ணன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. பேரூர் கழகச் செயலாளர் வெங்க–டேஷ் ராஜ், சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால் ராஜ், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், சாயல்குடி நகர் இளைஞர் அணி செய–லாளர் விக்னேஷ்ராம், மாவட்ட பிரதிநிதி புனித ராஜன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் சார்பில் தூய்மை பணியா–ளர்களுக்கு சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கி–னார்.
இந்நிகழ்ச்சியில் முதுகு–ளத்தூர் சட்டமன்ற அலுவ–லர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், சாயல்குடி பேரூர் கழக துணை செ–யலாளர் சுப்பிரமணியன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முனிஸ்வரன் இளைஞர் அணி முத்துக்கு–மரன், குருசாமி, கற்குவேல் உள்ளிட்ட தி.மு.க. நிர்வா–கிகள் கலந்துகொண்டனர்.
சாயல்குடி பேரூராட்சி–யில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச் சிக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமே–கலை பாக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் காமராஜ், ஆபிதா அனிபா அண்ணா, அழகர் வேல் பாண்டியன், குமரையா, ஆகியோர் முன் னிலை வகித்தனர்
தூய்மை பணியாளர்க–ளுக்கு அமைச்சர் சார்பில் தி.மு.க. சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய–பாலன் நலத்திட்ட உதவி–களை வழங்கினார். இதே போல் கடலாடி அரசு மருத்துவமனையில் நடை–பெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கி, அமைச்சர் ராஜ–கண்ணப்பன் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கடலாடி நகர செயலாளர் ராமசாமி, ஊராட்சி தலைவர்கள் ஏ.புனவாசல் ராஜேந்திரன், கீழக்கிடாரம் மீனாள் தங் கையா, முதுவை முருகன், பாலச்சந்தர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற் றனர்.
- கமுதி தனியார் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
- மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், வளர் இளம் பெண் களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை–பெற்ற கூட்டத்தில் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி வர–வேற்று பேசினார். நிர்வாக குழு தலைவர் அய்யாதுரை, செயலர் யோகேஸ்வரன், பொருளாளர் குமரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர்கள் துளசி, மருத முத்து ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தி–னருக்கான பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
- சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்ற வி.சி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2 தொட்டிகள் வடக்கு தெருவில் அமைந்துள்ளது. 50 வருடத்திற்கு மேலாக இந்த குடிநீர் தொட்டிகள் அங்கு உள்ளன. ஒரு தொட்டி ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர், மற்ெறாரு தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
தற்போது இந்த தொட்டிகள் சேதமடைந் துள்ளன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கீழக்கரை நகர செயலாளர் பாசித் இல்யாஸ் கூறுகையில், கீழக்கரையில் உள்ள 2 குடிநீர் தேக்க தொட்டிகள் மிகவும் பழு தடைந்துள்ளது. அடிக்கடி மின் மோட்டார் வேலை செய்யாத காரணத்தால் கீழக்கரை பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட பைப் லைன்கள் பொதுமக்கள் பணம் கட்டி மண்டலம் வாரியாக வீடு தேவைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள். பொது மக்களும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை செலுத்தி விட்டு பைப் லைன் இணைப்புகளுக்கு பணம் கட்டுகிறார்கள். தண்ணீர் வரியும் செலுத்துகிறார்கள்.
அரசு சார்பாகவும் 39 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைவதால் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் போகிறது. கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீராக வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகி றார்கள்.
அரசு புதிதாக தொட்டி கள் கட்டும் வரை மின் மோட்டார் படிக்கட்டு கள் கட்ட வேண்டும். 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டிகள் கட்ட வேண்டும். எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம் விடப்படுகிறது.
- மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
கீழக்கரை
கீழக்கரையில் பொது மக்களுக்கு இடையூறாக பராமரிப்பின்றி சுற்றித்தி ரியும் மாடுகளை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கீழக்கரையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அவை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைக்கப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அனுமதி இன்றி மாடுகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இது அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை யடுத்து மாடுகளை பாது காப்பதற்கு நியமிக்கப்பட்ட முருகேசன் என்பவர் நகராட்சி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (10-ந் தேதி) காலை 11 மணிக்கு அந்த மாடுகள் ஏலம்விடப் படவுள்ளன. ஒரு மாட்டிற்கு ஏலத் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதாவது:
ஏலத்திற்கான காப்புத் தொகையினை குறித்த காலத்திற்குள் டிமாண்ட் டிராப்டாக ஆணையாளர் கீழக்கரை நகராட்சி என்ற பெயரில் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்திற்கான காப்பு தொகை செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள். ஏலத்தின் போது ஆணை யாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஒவ்வொரு மாட்டிற்கான ஆரம்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்படும்.
இதற்காக பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இதே போல் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.
ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






