என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற கோரிக்கை
    X

    வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற கோரிக்கை

    • வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.

    ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×