என் மலர்
ராமநாதபுரம்
- இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
- வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.
அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.
இவ்வாறு அவர் கூறினார்
இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் அரசு பயணிகள் வாகனங்களும், ஏராளமான சுற்றுலா வாகனங்களும் செல்கின்றன. இதனால் தொண்டி பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்து வதற்கும், இச்சாலையில் உள்ள வணிக நிறுவ னங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் கட்டாயமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தவும் திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.
தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க, வணிகர் நலச்சங்க பிரதிநிதிகள் தனியார் வாகன ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வணிக நிறுவனங்கள் சாலைகளில் உள்ள தங்களது ஆக்கிர மிப்புகளை தாங்களாகவே 15 தினத்திற்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி துறை மற்றும் வருவாய்துறையினர் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட வார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலை, வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
- மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாகும். இதில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் மீன்பிடி தொழிலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த துறைமுகம் மூலமாக தினமும் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
மேலும் நாள்தோறும் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறுகிறது. இங்கு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கச்சத்தீவை சார்ந்த பகுதியை நம்பியே உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் என மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் பெரிய விசைப்படகுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். சிறிய படகுகள் என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.
மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய், நண்டு, மற்ற மீன்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தால் மட் டுமே தொடர்ந்து கட லுக்கு மீன்பிக்க செல்ல முடியும். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையின் தாக்குதல், விரட்டியடிப்பு மற்றும் கைது செய்யப்படும் நடவடிக்கை உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு அருகே கடற்படை கப்பல் களை சுற்றி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து படகுகளை இயக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார். பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது குறித்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான கொள்கை முடிவு எடுக்கும்.
இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. இந்தியா, பாரத் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. சனாதனம் தொடர்பான பிரச்சினையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்.
உதயநிதி வந்தபிறகு பா.ஜ.க.வுக்கு அதிக இளைஞர்கள் வருகை தருகிறார்கள். பா.ஜ.க.வின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரனார் 66-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி இந்தாண்டு அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இந்திய ராணுவத்தில் இணைத்துக்கொண்டு சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பியவர்.
இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது தி.மு.க. அரசு அரசு விழாவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தி.மு.க.வால் சொல்ல மட்டுமே முடியும். அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான்.
- சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார்.
ராமநாதபுரம்:
தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு நாளையொட்டி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு சார்பாக அமைச்சர்களுடன் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரனார் குடும்பத்தாரின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடியில் மணிமண்டபம் சிலையுடன் அமைக்க வேண்டும் என்பதுதான். இதனை ஏற்று இன்று தமிழக முதலமைச்சர் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாருக்கு திரு உருவசிலையுடன் மணிமண்டபம் கட்டித் தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்காக இம்மானுவேல் சேகரனாரின் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சமூக நீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக நீதி காப்பதற்காக போராடினார். அந்த வகையில் நாம் அனைவரும் சமூக நீதியை காக்க போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.
ராமநாதபுரம்
இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள் ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க ளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய கார ணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்தி ரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க. பொதுச்செயலாள ரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.
முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன்
முன்னாள் கழக அமைப் புச் செயலாளர் நிறைகுளத் தான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலா ளரும், வெங்கலக்கு றிச்சி ஊராட்சி மன்றத் தலைவ ருமான எஸ்.டி.செந்தில்கு மார் மற்றும் அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள் ளிட்டோர் அவரது நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.
- மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 550 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்
ராமநாதபுரம்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில் நடைபெற்ற 11 வது மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் மால்காம் அகாடமி மாணவர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். விழுப்புரம், சென்னை, கடலூர், மதுரை, தூத்துக்குடி , திருநெல்வேலி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 550 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மல்லர் கம்பம், மல்லர் கயிறு, தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணி மாணவிகள் கனிஷ்கா,லத்திகா,ரோஷினி, ரித்திகாஸ்ரீ, ஜனனி ஸ்ரீ ஆகியோர் 2-ம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவர்கள் தருண், வர்சன்ஶ்ரீ, ஹரிஸ் யோக தர்ஷன்,ஜாஹாஸ்டியன், ஹரிநிகேஷ்,ஸ்ரீஹர்சன் ஆகியோர் 3-ம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் தனித்திறமையாக மல்லர் கம்பத்தில் மாணவி.கனிஷ்கா இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாணவர்கள் ஹரிஸ்மா மேனகா, ஹம்ரிஷ் சிறப்பு பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மல்லர் கம்பம் பயிற்சியாளர் திருமுருகன் ராமநாதபுரம் மாவட்ட மால்காம் கழக தலைவர் மேத்யு இம்மானுவேல், பொருளாளர் தீபிகா மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரத்தில் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
- சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
- இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்து மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தது. அவர்களுக்கான மீன்பிடி அனுமதியும் வழங் கப்படவில்லை.
இதன் காரணமாக 1,650 விசைப்படகும், 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நான்கு நாட்க ளாக கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் குறைந்ததின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்க சென்ற னர். இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.
+2
- அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு சமுதாய நல அமைப்பினர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட் டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் தலைமையில் தென் மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை ஆகியோர் மேற்பார்வையில் 25 எஸ்.பி.க்கள் ,10 கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் என 8 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மது கடைகள் மூடப்பட்டிருந்தன.
- பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
- விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீதும், அசம்பாவிதம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி அரசியல் தலைவர்கள், சமுதாயத்தலைவர்கள், கிராமப்பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பு பணிகளில் 3 டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 6 ஆயிரம் வெளி மாவட்ட போலீசாரும், ராமநாதபுரம் மாவட்ட போலீசார் 2 ஆயிரம் பேர் உள்பட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 161 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரமக்குடியில் மட்டும் 200 கண்காணிப்பு கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அனைத்தும் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீதும், அசம்பாவிதம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
- அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






