என் மலர்
உள்ளூர் செய்திகள்

மல்லர் கம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
- மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 550 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்
ராமநாதபுரம்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில் நடைபெற்ற 11 வது மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் மால்காம் அகாடமி மாணவர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். விழுப்புரம், சென்னை, கடலூர், மதுரை, தூத்துக்குடி , திருநெல்வேலி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 550 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மல்லர் கம்பம், மல்லர் கயிறு, தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணி மாணவிகள் கனிஷ்கா,லத்திகா,ரோஷினி, ரித்திகாஸ்ரீ, ஜனனி ஸ்ரீ ஆகியோர் 2-ம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவர்கள் தருண், வர்சன்ஶ்ரீ, ஹரிஸ் யோக தர்ஷன்,ஜாஹாஸ்டியன், ஹரிநிகேஷ்,ஸ்ரீஹர்சன் ஆகியோர் 3-ம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் தனித்திறமையாக மல்லர் கம்பத்தில் மாணவி.கனிஷ்கா இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாணவர்கள் ஹரிஸ்மா மேனகா, ஹம்ரிஷ் சிறப்பு பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மல்லர் கம்பம் பயிற்சியாளர் திருமுருகன் ராமநாதபுரம் மாவட்ட மால்காம் கழக தலைவர் மேத்யு இம்மானுவேல், பொருளாளர் தீபிகா மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரத்தில் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.






