என் மலர்
ராமநாதபுரம்
- 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
- ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர்.
அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர்.
- வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான்.
- மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் முனீஸ்பாலா (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். அப்போது வெடுக்கென்று ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த முனீஸ்பாலா, உடனடியாக கையை உதறிக்கொண்டு வெளியில் எடுத்துள்ளான். உள்ளே பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
அதனை கண்டு அலறவே மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர். உடனடியாக மாணவன் முனீஸ்பாலா ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
அது ஒரு வகையான விஷப்பாம்பு என்பதை அறிந்த டாக்டர்கள், மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
ராமேஸ்வரம்:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் ஆர்வலர்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டி னை பெருமைப்படுத்து முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
"தமிழ்ச்செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதி யுரையும் வழங்கப்பெற்று வருகின்றன.
இவ்வகையில் 2023-ம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப் பங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரை கள் ஏதேனும் வெளியிடப் பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்க ளுடன், ஆற்றிய தமிழ்ப்பணி களுக்கான சான்றுகளையும் இணைத்து ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 6-ந்தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியா கவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு 04567-232130 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99449 69642 என்ற எண்ணிலோ அல்லது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
- பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
அபிராமம்
வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலா ளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ராம நாதபுரம் மாவட்டத்திலும் போதிய மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள் ளன. இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தற்போது இருந்தே உழவு பணிகளில் ஆர்வமாக உள்ளனர். நிலத்தை சீர் செய்து விதை விதைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கர்ணன் என்பவர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை இல்லததால் நெல் பயிர் பொதி பருவத்தில் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் போதிய மழை இருக்கும் என்று விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.
அதிலும் குறிப்பாக நெல், மிளகாய் பயிர்களை பயிர்செய்வ தற்காக விவசாய நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.
- தேசிய அளவிலான அலை சறுக்கு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
- விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்கள் பிரப்பன்வலசை கடற்கரையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டபம்
தேசிய மற்றும் தமிழ்நாடு அலை சறுக்கு அசோசி ேஷசன் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான நீர் சாகச போட்டிகள் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வ தற்காக தமிழகம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, கோவா, குஜராத், மகா ராஷ்டிராவில் இருந்து 80-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேசிய போட்டிகளில் பதக்கம்வென்ற 18 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதில் ஸ்பிரின்ட்ரேஸ் 200 மீட்டர், டெக்னிக்கல் ரேஸ் 2 கி.மீ., டிஸ்டன்ஸ் ரேஸ் 12 கி.மீ. பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்கவுள்ள வீரர்கள் பிரப்பன்வலசை கடற்கரையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்
பசும்பொன்
கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடி பூஜை நடத்தினர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
10-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு வான வேடிக்கை மேளதாளங்க ளுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகு வள்ளியம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசி சேர்த்தாண்டி வேடமிடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்பகுதியில் உள்ள ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, மேள தாளத்துடன் கையில் வேப்பிலை யுடன் ஆட்டமாடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து அழகு வள்ளியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுதல், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் வலம் சென்று ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்
- ராமநாதபுரத்தில் கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகத்தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடைநிலைக்கல்வி)பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வித்துறையிலுள்ள பள்ளிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, 2 அலகுகளையும் மாவட்டக்கல்வி அலுவலர் நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டன.
இதனால் கடந்த 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளாக கல்வித் துறை பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தன. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன் பேரில் புதிய அரசாணை 151 பிறப்பிக் கப்பட்டு, பள்ளிக்கல்விக்கும், தொடக்கக்கல்விக்கும் தனித்தனியான மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தற்போது பெரும்பா லான மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலைக் கல்விக்கும்,தொடக்கக் கல்விக்கும் மாவட்டத்திற்கு தேவையான மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கக்கல்விக்கு இரண்டு மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் இடைநிலை கல்விக்கு ஒரே ஒரு மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய ராமநாத புரத்தை மையமாக வைத்து அரசாணை 151-ன் படி ஓரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டக்கல்வி அலுவர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்வித்துறை பணியாளர்கள் ஆகியோர் தங்களுடைய அன்றாட பணிகளை மிகவும் சிரமத்துடன் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட எல்கை ஓரங்களிலுள்ள பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்க்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்களின் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது, அதேபோல் பள்ளி ஆசிரியர்களின் பணப் பலன்களை பெற்று வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஒரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலரால் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் முழுமையாக ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்த தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பள பட்டியலை சரி பார்த்தல்,வருடாந்திர ஊதிய உயர்வு ஆணை வழங்குதல் போன்ற பணிகளையும் மாவட்டக்கல்வி அலுவலரே செய்வதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணப் பலன்களை பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடைநிலைக்கல்விக்கு பரமக்குடியை மையமாக வைத்து கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். அவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள்.
இதற்கிடையே மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் வாராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதி கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாகவும் அடையாளம் காணப்பட்டது.
இந்த தூக்கு பாலம் ஒரு பொறியாளர் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் பாரமரிக்கப்பட்டு வந்தது. தூக்கு பாலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பாலம் அமைந்திருந்தது.
105 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, பாம்பன் கடல் பகுதியில் துளையிட்டு மண் ஆய்வுப் பணி தொடங்கியது. விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் 6 மாதம் கழித்து குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கியது. 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலத்தின் மையப்பகுதியில் மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் தண்டவாளம் பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு இருபுறமும் தூண்கள் அமைப்படும். இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
- தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபத்திற்கு அரசு அறிவிப்புக்கு முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பளித்தார்.
- ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் நேற்று பர மக்குடியில் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பி.பி.எப்.டி. அமைப்பின் நிறுவன தலை வரும், முன்னாள் கவுன்சில ருமான பொன்னையாபுரம் மனோகரன் தனது ஆதரவா ளர்களுடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். அவ ருக்கு எங்கள் அமைப் பின் சார்பில் நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம்.இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல் இது நீண்ட போராட் டமாக இருந்தது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் எங்கள் அமைப்பின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.
நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் அண்டக்குடி முருகே சன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதக்காதி, மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி, தனுஷ் பிரபாகரன், மதி இளமாறன், ராமநாத பிரபு, சரோன் இளமாறன் உள்ளிட்ட பி.பி.எப்.டி. அமைப்பின் நிர் வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.
- இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு எஸ்.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
- 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.
தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியனுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீப் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது எஸ்.ஆர். பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில்:-
தேவேந்திரகுல வேளா ளர் மக்களின் நீண்ட கோரிக் கையான தியாகி இமானு வேல் சேகரனார் அவர் களுக்கு தமிழக அரசு சார் பில் 3 கோடி செலவில் முழுஉருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக் கப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலை வர் அருண்குமார், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன் தெற்கு மண்டல செயலாளர் மங்கள ராஜ், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்டதுரை பழனி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருத குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனிவேல் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாழ மணி பாண்டியன், தென் காசி மாவட்ட செயலாளர் யோகராஜ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரவின் ராஜ், நெல்லை மாவட்ட செயலா ளர் ராஜேஸ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலா ளர் கருப்பசாமி பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.






