என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஷ்மீர் சகாயநாதன் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் பீவி, காரான் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் விழாவை நடத்தினார்.

    பள்ளி ஆசிரியர் செயலர் ஜோசப் பீட்டர் ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் இணைச் செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவா டானை பஞ்சாயத்து யூனி யன் மேற்கு தொடக்கப் பள்ளியானது தூய்மைக்கான மாநில அரசின் விருது பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியின் தலைமையாசி ரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    இந்த நிலையில் இப் பள்ளியில் எண்ணும், எழுத்தும், காலை உணவு திட்டம் போன்ற கல்வி சம்பந்தமான அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு தயாராக உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 250 மாணவ-, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ள னர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை நம்பி வருகின்ற னர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை யால் முழுமையாக கல்வியை பெற முடி யவில்லை. ஆனால் அதிகாரி கள் இதுகுறித்து பாராமுக மாக இருப்பதாக கூறப்படு கிறது.

    காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவ தில் அக்கறையுடன் செயல் படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி குறித்த அறிக்கைகளை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதில் கூறப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மாணவ-மாணவகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    • முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
    • யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் சந்தவழியான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதையொட்டி நேற்று மாலை மங்கல இசை, எஜமான் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மங்கல இசை, சூரிய பூஜை, இரண்டாவது யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மங்கல இசை கோமாதா பூஜை, நாடிசந்தானம், பரிஷாகுதி, உயிர் ஓட்டம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.

    சந்தவழியான் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களான முனியப்ப சாமி, விநாயகர், பாதாள காளியம்மன், கருப்பணசாமி ஒச்சமை, நாச்சம்மை, நாகக்கன்னி, சோனை கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை சந்தவழியான் சுவாமி கோயில் குடிமக்கள் செய்து வருகின்றனர்.

    • ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • ராமநாதபுரத்தில் விதைப்பண்ணை அமைக்க பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயி களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது மாவட்ட த்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதை யின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ராமநாத புரம் மாவட்டத்தில் 86 கிராமங்கள் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நெல் விதைப் பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதார நிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி விதை அலுவலர்களை அணுகி பெற்றிடலாம். கோ 51, ஏ.டி.டீ. 45, ஆர்.என்.ஆர் 15,048 போன்ற குறுகிய கால நெல் விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகிய வற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும். நெல் விதைப் பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதை அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ. 25-ம், வயலாய்வுக் கட்டணமாக ரூ 100-ம் விதை பரி சோதனைக் கட்டணமாக ரூ.80-ம் செலுத்தி நெல் விதைப் பண்ணை அமைத்து லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    • மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன் பிடிக்க சென்றபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர்களை சிங்கள கடற்படையிர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதேபோல் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் சென்ற 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரையும் வருகிற 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்வாதாரம் இழந்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று வேலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படாததாலும், இயற்கை சீற்றங்களினாலும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று துவங்கி உள்ளனர்.

    இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அத்துடன் பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடலில் சூறைக்காற்று வீசியதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு தடை, ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு உரிய விலை தராததை கண்டித்து வேலை நிறுத்தம் உள்ளிட்டவைகளால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    12 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது.
    • மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேஸ்வரம்:

    கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.

    • நவீன எந்திரம் மூலம் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2,345 மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை பேருந்து பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

    கடலின் அழகை ரசித்த வாறு தின மும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணி கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணித்து அனுபவித்து வருகிறார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாம்பன் பேருந்து பாலம் பரமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பாம்பன் பேருந்து பாலத்திற்கு ரசா யன வர்ணம் பூசுவது, இரு புறம் உள்ள நடைமேடை இணைப்புகள் சீரமைப்பு, சேதமடைந்த தடுப்பு சுவர் கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதில் புயல், மழை மற்றும் இயற்கை இடர்பாடு கள் தவிர்த்து மற்ற நாட்க ளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தற்போது செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண் டும் என்பதால் நவீன எந்தி ரம் மூலம் ரசாயன வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில், 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கீழக்கரை அருகே மேலவலசை கிராமத்தில் 263-வது ஆண்டு எருதுகட்டு விழா நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவிலில் 263-ம் ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற் றது.

    இதில், 55 கிராமங்களில் இருந்து 55 காளைகள் போட் டியில் பங்கேற்றது. பின்னர் மைதானத்தில் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களத் தில் அவிழ்த்து விடப்பட் டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கினர்.

    இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில், மாடு முட்டியதில் காயமடைந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கோவில் டிரஸ்டி மேலவலசை கிழவன் தலைமையிலான விழாக் கமிட்டி யினர் சிறப்பாக செய்திருந் தனர்.

    • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி திட்டமிடல் அதிகாரி முனை வர் திராவிடச்செல்வி வர வேற்றார்.

    விழாவில், சிறப்பு விருந் தினராக தனியார் டி.வி. புகழ் மதுரை முத்து கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாணவர்கள் நேர்மறை யான சிந்தனையு டன் கல்வி பயின்று அதன்மூலம் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று வீட்டிற்கும், நாட்டிற் கும் பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு எந்த செயலை யும் செய்தால் தான் அதில் வெற்றியடைய முடியும்.

    வாழ்க்கையில் சிரிப்பதற் கும் நேரம் ஒதுக்குங்கள், அப்பொழுது தான் ஆரோக் கியமான உடல் நலத்துடன் வாழ முடியும். தங்களை பெற்ற தாய், தந்தையரை வயதான காலத்தில் அவர்க ளுக்கு உறுதுணையாக இருப்பது அனைவருடைய அத்தியாவசிய கடமை. அதை நாம் அனைவரும் மனதில் நிலை நிறுத்த வேண்டும் என்றார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவி பத்மபிரியா பேசு கையில், நான் இந்த கல்லூரி யில் படிக்கும்போது எனக்கு பேராசிரியர்கள் ஊக்கத்து டனும், தன்னம்பிக்கையுட னும் கூடிய கல்வியை கற்று தந்ததனால் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்களது பேராசிரி யர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.முன்னாள் மாணவர் ராஜேஷ் குமார் பேசுகையில், இன்று முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பை துவங்க உள்ள மாணவர்கள் அனைவரும் செய்முறை பயிற்சியுடன் கூடிய கல்வி தான் உங்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே நீங்கள் புரிந்து படித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இயற்கைக்கு உகந்த புதுமையான கண்டு பிடிப்புகளை உருவாக்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் 15 குழுக் களாக பிரிந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் பல ஆராய்ச்சி படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்த னர். இதனை விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள், மாணவர்கள், விருந்தினர் கள் பார்வையிட்டு மாண வர்களை பாராட்டினர்.

    இதில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூ ரிகள், பள்ளிகளின் முதல் வர்கள் சேக் தாவூத், ராஜ சேகர், சோமசுந்தரம், சேகர், ஆலியா, சுமதி மற்றும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் டீன் முனை வர், செல்வபெருமாள், அனைத்து துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர் கள் அவர்களின் பெற்றோர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத்த லைவர் முனைவர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.

    • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    • டெல்லியில் மத்திய மந்திரியிடம் ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ குழுவினர் மனு அளித்தனர்.

    ராமேசுவரம்

    மன்னார் வளைகுடா கடலில் காற்றாலை அமைக் கும் திட்டம், கடல் அட்டை தடை நீக்கம், இலங்கை கடற் படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க நிர்வாக குழுவி னர் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் குழுவினர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    மந்திரியிடம் மனு

    மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட் டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்ப ளவைக் கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட 21 தீவுகள் மன்னார் வளை குடா கடல் வாழ் உயிரின தேசியப் பூங்காவாக 1986-ல் மத்திய அரசால் அறிவிக் கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இது தென்கிழக்கு ஆசியா வில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பகுதியில் 2,700-க்கும் மேற்பட்ட பல்வகை கடல் வாழ் உயிரி னங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் கொண்டு வருவது மீன் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அத்துடன் மீன வர் வாழ்வாதாரம் பேர ழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையி னர் பல ஆண்டுகளாக நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்தது நிறுத் தப்பட்டவேண்டும். இப்பி ரச்சினைக்கு நிரந்தர தீர்வு கான ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்க ளுக்கு 100 சதவீதம் மானி யத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கடல் அட்டைகளை பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, மீனவர்கள் நலன் கருதி கடல் அட்டை களை ஏற்றுமதி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க் கின்றனர். கடல் அட்டைகள் பிடிப்பதற்கான சிறப்பு வலை இல்லாததால், கடல் அட்டைகள் மீன்பிடி வலை யில் தானாகவே சிக்குகின் றன. கடல் அட்டைகள் அழிந்து வரும் இனம் அல்ல ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் திறன் கொண் டது

    கடந்த 22 ஆண்டுகளாக கடல் வெள்ளரிக்கு விதிக் கப்பட்ட தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பல வெளிநா டுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப் பட்டு அனு மதி வழங்கப்பட் டுள்ளது. இதனை அடிப்ப டையாகக் கொண்டு நமது நாட்டிலும் அனுமதி வழங்கு மாறு கேட்டுக்கொள்கின் றோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளிர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, ஏ.சண்முககனி, காளியம் மாள், அனிதாசீலி, லெட்சுமி, ஆ.நம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×