என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
- இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.
- ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.
- மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத் தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள்.
அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும், சிங்கள கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
சில வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், படகுகளை இலங்கை அரசு அந்த நாட்டுடமையாக்கி விடுகிறது. இதனால் படகுகளை பறிகொடுக்கும் மீனவர்கள் வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயி ரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர். மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.
இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
- பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
ராமேசுவரம்
நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
- இதம்பாடல், ஏர்வாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
- துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .
சாயல்குடி
சாயல்குடி அருகே இதம்பாடல், ஏர்வாடி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ராஜ கண்ணப் பன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் படி சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மகளிர் உரிமை தொகை தொடர்பான துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் இதம் பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, கிளைச் செயலாளர் காதர் பாட்ஷா, இளைஞர் அணி பால முருகன், முத்து ராஜா, காதர், நீலமேகம், சாதிக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் ராம கிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தொடக்க பள்ளியில் மாவட்ட அளவி லான அபாகஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் 21 பள்ளிகளில் இருந்து 787 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் 9 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், மற்ற மாணவர்கள் முதல் 3 இடங்களிலும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்றாகீம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.
- கிடைத்த வேலையை பயன்படுத்தி விருப்பமான வேலைக்கு முயற்சி செய்து சேர வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
- எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார்.முகாமில் மொத்தம் 2523 மாணவர்கள் பங்கேற்ற னர். இதில் தேர்வு செய்யப் பட்ட 309 பேருக்கு கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் முதல் வேலைவாய்ப்பு முகாம் நடந்துள்ளது. 2-வது முகாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனி யார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய வருகை தருகிறார்கள். இதுபோன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நம்மை தேடி வரும் நிறு வனங்களுக்கு சென்று நம்முடைய கல்வித் தகுதிக் கேற்ப வேலைவாய்ப்பு தேர்வு செய்திட வேண்டும். சில நேரங்களில் நமது கல்வித் தகுதிக்கு இணையாக வேலை வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், முதலில் கிடைக்கும் வேலையை பயன்படுத்த வேண்டும். காரணம் அதில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கும்.
நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொண்டு பின்னர் எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற வாணி கருப்பு (வயது 21). இவரது நண்பர் அபிபாலன் (21). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சில நண்பர்களுக்கும் 'கெத்து' காட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வழக்கம்போல் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் யார் அதிக கெத்து என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் ஒரு தரப்பினர் அங்கிருந்து கோபமாக சென்றதாக கூறப்படுகிறது. ஹரிசும், அபிபாலனும் அந்த பகுதியில் நின்றிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த வாள் மற்றும் கத்தியால் ஹரீசை சரமாரியாக வெட்டினர். மேலும் பீர்பாட்டிலை உடைத்து முகத்தில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனிருந்த அபிபாலனையும் மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் நெஞ்சில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பரமக்குடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிபாலனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹரீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அபிபாலன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி அதனடிப்படையில் சில நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் வசிக்கும் வைகை நகர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நண்பர்களுக்குள் யார் கெத்து என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வருகிற 27-ந் தேதி வரை ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடந்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடற் கரையில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
ராமேசுவரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இறால் மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 2 நாள்கள் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் வகைகள் ஏற்றுமதி இல்லாததால் ரூ.5 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் கடல் உள்வாங்கியது.
- இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 100 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது. இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.
மேலும் உள்வாங்கிய கடல் காரணமாக அந்த பகுதியில் உள்ள பவளப் பாறைகளில் முழுமையாக வெளியே தெரிந்தன. தீர்த்த கடலில் கடல் நீரை கண்ட பக்தர்கள் இன்று தண்ணீறின்றி பாறைகள் தெரிந்ததால் அதிர்ச்சிக்கும் ஆச்சிரியத்திற்கும் உள்ளாகி னர். சமீப காரணமாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் இன்று அதிகளவில் கடல் உள்வாங்கியதால் உள்ளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
- அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.
சாயல்குடி
சாயல்குடியில் இந்தியா கூட்டணி மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் அண்ணா பிறந்த தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகை தீன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர் பாஸ்கரன் வரவேற்றார்.
மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் கணே சன், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்க டேஷ்ராஜ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை பாக்கியராஜ், தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், புரட்சிகர இளைஞர் மாவட்ட பொருளாளர் தமிழ் முருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் காமராஜ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி, மாவட்ட பிரதிநிதி புனித ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
- .மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அரசின் சாதனை விளக்க துண்டு பிரசு ரங்களை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சடை நாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ்.தரைக்குடி ஊராட்சி தலைவர் முனிய சாமி, ஆர்.சி.புரம் கிளை செயலாளர் பிரான்சிஸ், கன்னிராஜபுரம் ஊராட்சி செயலாளர் நீதி வேந்தன், தெற்கு நெருப்பியூர் ஊராட்சி செயலாளர் யாகியா கான், வெட்டுக்காடு ஊராட்சி செயலாளர் சண்முகம், சாயல்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நாகரத்தினம், மின்னல் கூட்டுறவு அமைப்பு தலைவர் முருகன், கன்னி ராஜபுரம் கண்ணன், முருகன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகே ஆற்றாங்கரை ஊராட்சியில் வைகை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை காலத்தில் காற்றின் திசை, வேகம் மாறுபாட்டால் ஆற்றுக்கும், கடலுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து மணல் மூடிவிடும்.
கடலுக்கும், ஆற்றுக்கும் தொடர்பு துண்டிக்கப்படும் போது ஆற்றுப்பகுதிக்கு படகுகளை கொண்டு செல்ல முடியாமல் கடல் பகுதியில் நிறுத்த நேரிடும். அதனால் கடலில் வீசும் காற்றில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடை கின்றன. அதனால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து வைகை ஆற்றை துார்வார அப்பகுதி மீனவர்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நேற்று மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ஆய்வாளர் காளீஸ்வரன், பொறியாளர் மணிவண் ணன் ஆகியோர் ஆற் றங்கரை முகத்துவார பகுதியை பார்வையிட்டனர்.
ஆற்றை தூர் வாருவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து மீன்வளத்துறை உயர் அதி காரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு முழுமையாக ஒப்புதல் வழங்கிய பின் துார் வாரும் பணிகள் நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.






