search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Birthday Party"

    • அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் இந்தியா கூட்டணி மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் அண்ணா பிறந்த தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகை தீன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர் பாஸ்கரன் வரவேற்றார்.

    மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் கணே சன், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்க டேஷ்ராஜ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை பாக்கியராஜ், தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், புரட்சிகர இளைஞர் மாவட்ட பொருளாளர் தமிழ் முருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் காமராஜ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி, மாவட்ட பிரதிநிதி புனித ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார்-அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசும்பொன்பாண்டியன் அறிக்கையை வெளியிட்டார்.
    • அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.

    மதுரை

    அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளை கொண்டாடுவது தமிழனின் கடமையாகும். திராவிடப்பெருநாளாகும் வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்திட அ.தி.ம.மு.க. நிர்வாகிகளையும் அன்புடன் வேண்டுகிறேன்.

    அன்று தலைமைக்கழகத்தில் சார்பில் எனது தலைமையில் மதுரையில் உள்ள அன்னை இல்லத்தில் அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.

    பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தமிழர்களின் கடமையாகும். சனாதன, வகுப்புவாத சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடாமல் தடுக்க பெரியாரின் பிறந்தநாளை திருவிழாவாக அ.தி.ம.மு.க.வினர் கொண்டாடி மகிழ வேண்டும்.

    பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டுகிறேன்.தலைமைக்கழகத்தின் சார்பில் மதுரை மேலூரில் 17-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

    காலை 8 மணிக்கு பெரியார் படத்திற்கு தலைமைக்கழகத்தில் மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இதில் அ.தி.ம.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வட்ட, ஊர்க்கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×