மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்

முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார்.
மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஷ்மீர் சகாயநாதன் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் பீவி, காரான் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் விழாவை நடத்தினார்.

பள்ளி ஆசிரியர் செயலர் ஜோசப் பீட்டர் ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் இணைச் செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com