search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed Farm"

    • ராமநாதபுரத்தில் விதைப்பண்ணை அமைக்க பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயி களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது மாவட்ட த்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதை யின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ராமநாத புரம் மாவட்டத்தில் 86 கிராமங்கள் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நெல் விதைப் பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதார நிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி விதை அலுவலர்களை அணுகி பெற்றிடலாம். கோ 51, ஏ.டி.டீ. 45, ஆர்.என்.ஆர் 15,048 போன்ற குறுகிய கால நெல் விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகிய வற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும். நெல் விதைப் பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதை அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ. 25-ம், வயலாய்வுக் கட்டணமாக ரூ 100-ம் விதை பரி சோதனைக் கட்டணமாக ரூ.80-ம் செலுத்தி நெல் விதைப் பண்ணை அமைத்து லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கினார்.
    • விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்ப தற்கு தேவையான ஆதார நிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    கோ 51, ஏடிடீ 45 போன்ற குறுகிய கால விதை ரகங்கள் மற்றும் டி.கே.எம். 13, என் .எல். ஆர். 34449, போன்ற மத்திய கால விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விதைகளை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப்பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும்.

    விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் ரூ.25, வயலாய்வு கட்டணம் ரூ.100, விதை பரிசோதனைக் கட்டணம் ரூ.80 செலுத்த வேண்டும்.

    விதைத்த 35-வது நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்க ளுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விதை பண்ணைகள் விதைச் சான்று அதிகாரிகளால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கல வன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இவ்வாறு கலவனற்ற, இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

    இது தவிர சிறுதானி யங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறுவகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.
    • தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப்பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஓன்றியக்குழு உறுப்பினர் சரவணன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்செங்காட்ங்குடி ஒன்றியத்குழு உறுப்பினர் இளஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி ஆகியோர் விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.

    விதை சான்று அலுவலர் மாறன் விதைப்பண்ணையில் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றியும் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், தோட்டக்கலைத்துறை சார்பான திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×