என் மலர்
உள்ளூர் செய்திகள்

உழவு பணிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
அபிராமம்
வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலா ளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ராம நாதபுரம் மாவட்டத்திலும் போதிய மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள் ளன. இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தற்போது இருந்தே உழவு பணிகளில் ஆர்வமாக உள்ளனர். நிலத்தை சீர் செய்து விதை விதைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கர்ணன் என்பவர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை இல்லததால் நெல் பயிர் பொதி பருவத்தில் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் போதிய மழை இருக்கும் என்று விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.
அதிலும் குறிப்பாக நெல், மிளகாய் பயிர்களை பயிர்செய்வ தற்காக விவசாய நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.






