search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neatness"

    • பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    பசும்பொன்

    கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடி பூஜை நடத்தினர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    10-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு வான வேடிக்கை மேளதாளங்க ளுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகு வள்ளியம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசி சேர்த்தாண்டி வேடமிடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அப்பகுதியில் உள்ள ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, மேள தாளத்துடன் கையில் வேப்பிலை யுடன் ஆட்டமாடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து அழகு வள்ளியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுதல், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் வலம் சென்று ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • அலங்காநல்லூர் அருகே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    • இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் செல்வ விநாயகர், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவில் சாத்தவுராயன் சுவாமிக்கு வாண வேடிக்கையுடன் பக்தர்கள் பழக்கூடை எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாய் வெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×