search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது
    X

    தமிழ் ஆர்வலர்களுக்கு 'தமிழ்ச்செம்மல்' விருது

    • தமிழ் ஆர்வலர்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டி னை பெருமைப்படுத்து முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

    "தமிழ்ச்செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதி யுரையும் வழங்கப்பெற்று வருகின்றன.

    இவ்வகையில் 2023-ம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப் பங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரை கள் ஏதேனும் வெளியிடப் பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்க ளுடன், ஆற்றிய தமிழ்ப்பணி களுக்கான சான்றுகளையும் இணைத்து ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 6-ந்தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியா கவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

    மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு 04567-232130 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99449 69642 என்ற எண்ணிலோ அல்லது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×