என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அகமது நெய்னார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உசேன் வரவேற்றார்.

    அபிராமம் மற்றும் நத்தம் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலருமான கே.சம்பத் ராஜா வரவேற் றார்.

    மாவட்ட தி.மு.க. செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் எம்.ஆசிக் அமீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத் தப்பட்டோர் நலன் மற்றும் கதர் வாரியத்துறை அமைச் சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பி.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெ.ஜெய–ரஞ்சன் கருத்துரை வழங்கி னார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். விளை யாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராம நாதபுரம் 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, சன் சம்பத்குமார், ஆர்.எஸ்.சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.ஸ்டாலின், என்.பொன் மணி, சங்கர், எம்.வசந்த்,

    ஆர்.சண்முகப்பிரியா,ப.சம்பத்குமார், மருத்துவர் அணி துணை அமைப்பா ளர்கள் தி.சந்திரமோகன் வா.எபினேசர், செல்வராஜ், எம்.எம்.கார்த்திக், பா.சர வணபாலன், வே.சேகர், சி.கணேசன், த.கார்த்திகே யன், ந.மதிவாணன் வ.மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • 100 ஆண்டுக்கும் மேலாக அன்ன குவியல் மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
    • ஏற்பாடுகளையும் கவுரவ செட்டியார் உறவின் முறையார் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ராமானுஜ பஜனை மடம் சார்பில், அன்னக் குவியல் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ராமானுஜ பஜனைமடம் சார்பில், காமாட்சியம்மன் கோவி லில், புரட்டாசி மாத 5- ம் வார சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு மகேஸ்வரபூஜை நடைபெறுவது வழக்கம்.

    புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமை மட்டும் வந்த தால், நேற்று 5-ம் சனிக்கி ழமையாக கருத்தில்கொண்டு இந்த பூஜை நடை பெற்றது. இந்த 108-ம் ஆண்டு மகேஸ் வர பூஜையில், ஆன்மீக துற விகள் உள்ளிட்டோருக்கு, பொதுமக்களிடம் சேகரித்த கைப்பிடி அரிசியில் ஒரு நாள் முழுவதும் அன்னதா னம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி கடந்த 1915-ம் ஆண்டு முதல் முன்னோர் காலத்தில் இருந்து கமுதியில் பாரம்பரிய முறையில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில், பொதுமக்களிடம் நேரில் சென்று சேகரிக்கப் பட்ட கைப்பிடி அரிசியில் ஒவ்வொரு ஆண்டும் புரட் டாசி மாத ஐந்தாம் வார சனிக்கிழமையில் நடைபெ றும்.

    மகேஸ்வர பூஜை இந்த ஆண்டு 108 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மலர் மாலை பூக்களால் அலங்கரிக்கப் பட்ட சாத குவியலுக்கு சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்று அதை பிரசாதமாக பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங் கட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கௌரவ செட்டியார் உறவின் முறை யார் செய்திருந்தனர்.

    • மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டுள்ளது.
    • மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய இரண்டு கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதே போன்று தென் அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகி உள்ளது.

    இதனால் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இதனை கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவர்களை விடுக்க கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு சிறிய படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று 152 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். இதனால் பல ஆயிரம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் இழப்புடன் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க செல்லவே மீனவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தனியார் நிறுவன மேலாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள முருகானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகன் மகேந்தி ரன். இவர் சென்னையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி யில் உதவி மேலா ளராக பணியாற்றி வந்தார்.

    தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகநே்தி ரன் சொந்த ஊர் திரும்பி னார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதாகி இருந்தது.

    இதையடுத்து மகேந்திரன் சம்பவத்தன்று கிணற்றில் இறங்கி பழுதான மின் மோட்டாரை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார்.

    அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ராமநாத புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி பாகம் பிரியாள் கொடுத்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்கேன் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • எந்திரங்கள்-மோட்டார் சைக்கிள் கருகின.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் அய்யாதுரை தெருவில் கடந்த பல ஆண்டுகளாக பரமக்குடி சிடி ஸ்கேன் மற்றும் கலர் டாப்ளர் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் ஸ்கேன் மையத்தில் திடீரென ஒரு வித சத்தத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி த்தனர். ஆனால் பலனில்லை. தீயின் பரவல் அதிகரித்ததால் பரமக்குடி தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த னர். சிடி ஸ்கேன் எந்திரம், டாப்ளர் ஸ்கேன் எந்தி ரங்கள், இரு சக்கர வாகனம், அலுவலகத்திற்கு பயன் படுத்தக்கூடிய பொருட்கள் உட்பட அனைத்தும் முற்றிலு மாக எரிந்து தீயில் கருகினர்.

    இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை நடக்கிறது.
    • இந்தியன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தர வின்பேரில், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி, கிஸ்வா சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2023-ம் ஆண்டிற்க்கான மாநில அளவிலான 3-வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிக்கலில் உள்ள இந்தியன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடை பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர்ரா ஜகண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகின்றனர். தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செய லாளர் வே.நம்பி, இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், மேலச்சிறுபோது ஊராட்சி மன்ற தலைவருமான எம்.சம்சாத் பேகம் முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.ராமநாத புரம் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பி னரும், நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசு கிறார்.

    ராமநாதபுரம் நகரசபை தலைவரும், வடக்கு நகர் செயலாளருமான ஆர்.கே. கார்மேகம், துணைத்தலை வரும், தெற்கு நகர் தி.மு.க. செயலாளருமான பிரவீன் தங்கம், ராமநாதபுரம் யூனியன் தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான பிரபாகரன், கீழக்கரை நகரசபை துணைத்தலைவ ரும், பொதுக்குழு உறுப்பின ருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    சிறப்பு அழைப்பாளர்க ளாக சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் பரக்கத் ஆயிஷா மிசா சைபுதீன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் பிரவீன் (மண்டபம் மேற்கு), ஜெயபாலன் (சாயல்குடி மேற்கு), குலாம் முகைதீன் (சாயல்குடி கிழக்கு), மாயக்கிருஷ்ணன் (கடலாடி தெற்கு), .ஆறு முகவேல் (கடலாடி வடக்கு), தி.மு.க ஒன்றிய இளைஞரணி முஹம்மது அசாருதீன் (சாயல்குடி கிழக்கு), முஹம்மது அஸ்லம் (கடலாடி வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்ற னர்.

    முடிவில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் நன்றி கூறுகிறார். தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா ஆலோ சனையின் பேரில் தி.மு.க. பிரமுகர் கே.கே.எஸ்.எம்.ஏ. நிறுவனர் அஹமது மரைக்கான் செய்து வருகிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் துரை.கண்ணன், சரவண சுதர்சன், காயாம்பு, ராஜகுரு, முகம்மது அசாரு தீன், அம்பிகா நாகராஜ், சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தர பாண்டியனை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    • வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
    • 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.

    இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆய் வுக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், கனமழை பெய்த வுடன் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் தூர்வார வேண்டும். நக ராட்சி பகுதியில் உள்ள 15 குளங்கள் மழை நீர் தேக்கி வைத்திடும் வகையில் கால் வாயை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார பணி களை மேற்கொள்ள வேண் டும் என ஆலோசனை வழங்கப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராமநாதசுபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முழு குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடும் வகை யில் தமிழ்நாடு அரசு சார் பில் ரூ.2,819 கோடி மதிப் பீட்டில் சிறப்பு கூட்டு குடி நீர் திட்டம் ஒப்புதல் அளிக் கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந்தேதி நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தொடங்கப்பட் டுள்ளது.

    மேல்நிலை தொட்டிகள்

    அந்த வகையில், ராமநாத புரம் நகராட்சியில் ரூ.229 கோடி மதிப்பீட்டில் தொடங் கப்பட்ட சிறப்பு கூட்டு குடி நீர் திட்டப்பணிக்காக கான் சாகிப் தெரு, கோட்டை மேடு, சிங்காரம் தோப்பு ஆகிய மூன்று இடங்களில் 50 லட்சம் மதிப்பீட்டில் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கி றது.

    இதையொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி பூமி பூஜைக்கு குடிநீர் வடிகால் வாரிய மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெ.பாலாஜி தலைமை தாங்கினார்.

    இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி டலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்த லைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் ரெங்கராசு, ராமநாத புரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன்,

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாள ரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான நகராட்சி கவுன்சிலர் முகம் மது ஜஹாங்கீர் (எ) ஜவா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் தொழிலதிபர் என்.திருமாறன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் கலந்துகொண்டனர்.

    ×