ஸ்கேன் மையத்தில் பயங்கர தீ விபத்து

ஸ்கேன் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எந்திரங்கள்-மோட்டார் சைக்கிள் கருகின.
ஸ்கேன் மையம் முற்றிலும் எரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்
ஸ்கேன் மையம் முற்றிலும் எரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்
Published on

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் அய்யாதுரை தெருவில் கடந்த பல ஆண்டுகளாக பரமக்குடி சிடி ஸ்கேன் மற்றும் கலர் டாப்ளர் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் ஸ்கேன் மையத்தில் திடீரென ஒரு வித சத்தத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி த்தனர். ஆனால் பலனில்லை. தீயின் பரவல் அதிகரித்ததால் பரமக்குடி தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த னர். சிடி ஸ்கேன் எந்திரம், டாப்ளர் ஸ்கேன் எந்தி ரங்கள், இரு சக்கர வாகனம், அலுவலகத்திற்கு பயன் படுத்தக்கூடிய பொருட்கள் உட்பட அனைத்தும் முற்றிலு மாக எரிந்து தீயில் கருகினர்.

இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com