என் மலர்
உள்ளூர் செய்திகள்

கமுதி ராமானுஜ பஜனை மடம் சார்பில் அன்னக் குவியல் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
100 ஆண்டுக்கும் மேலாக நடைபெறும் அன்ன குவியல் மகேஸ்வர பூஜை
- 100 ஆண்டுக்கும் மேலாக அன்ன குவியல் மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
- ஏற்பாடுகளையும் கவுரவ செட்டியார் உறவின் முறையார் செய்திருந்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ராமானுஜ பஜனை மடம் சார்பில், அன்னக் குவியல் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ராமானுஜ பஜனைமடம் சார்பில், காமாட்சியம்மன் கோவி லில், புரட்டாசி மாத 5- ம் வார சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு மகேஸ்வரபூஜை நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமை மட்டும் வந்த தால், நேற்று 5-ம் சனிக்கி ழமையாக கருத்தில்கொண்டு இந்த பூஜை நடை பெற்றது. இந்த 108-ம் ஆண்டு மகேஸ் வர பூஜையில், ஆன்மீக துற விகள் உள்ளிட்டோருக்கு, பொதுமக்களிடம் சேகரித்த கைப்பிடி அரிசியில் ஒரு நாள் முழுவதும் அன்னதா னம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கடந்த 1915-ம் ஆண்டு முதல் முன்னோர் காலத்தில் இருந்து கமுதியில் பாரம்பரிய முறையில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில், பொதுமக்களிடம் நேரில் சென்று சேகரிக்கப் பட்ட கைப்பிடி அரிசியில் ஒவ்வொரு ஆண்டும் புரட் டாசி மாத ஐந்தாம் வார சனிக்கிழமையில் நடைபெ றும்.
மகேஸ்வர பூஜை இந்த ஆண்டு 108 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மலர் மாலை பூக்களால் அலங்கரிக்கப் பட்ட சாத குவியலுக்கு சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்று அதை பிரசாதமாக பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங் கட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கௌரவ செட்டியார் உறவின் முறை யார் செய்திருந்தனர்.






