என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.
- மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
- துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.
பரமக்குடி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் சங்கச் செயலாளர் கண்ணுச்சாமி தீர்மானங்களை வாசித்தார்.
முன்னதாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மருது பாண்டியர்களுக்கு பரமக்குடி ஓட்டபாலத்தில் அவர்களது உருவச்சிலை நிறுவவும், அகமுடையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் அகமுடையர் என மாணவ-மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கவும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் ராஜி நன்றி கூறினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள், பரமக்குடி புதுநகர் சங்க செயலாளர் எஸ்.ராமு, வழக்கறிஞர் சரவணாபாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றார்.
- மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல் பட்டணம் கிரா மத்தில் பொதுமக்களி டம் குறைகள் கேட்டு அவர்களி டம் இருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக அவரை மைக்கேல் பட்ட ணம் ஊராட்சி மன்ற தலை வர் குழந்தை தெரஸ் சிங்க ராயர் வரவேற்றார்.
அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுமக் களிடம் போதுமான குடிநீர் கிடைக்கிறதா? நிலத்தடி நீர் உள்ளதா? என கேட்டறிந் தார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் குடிநீர் தின சரி வருவதில்லை எனவும், சிலநேரங்களில் சிரமம் ஏற்படுகிறது என தெரிவித் தனர். மேலும் கலெக்டரிடம் போர்வெல் அமைத்துத்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்தார்.
மைக்கேல் பட்டணம் பஞ்சாயத்து எல்லையில் சோலார் பிளாண்ட் உள் ளது. ஆனால் தொழில் வரி செல்லூர் பஞ்சாயத்தில் செலுத்தப்படுகிறது. சோலார் பிளாண்டை சுற்றி யுள்ள சாலைகளை மைக் கேல் பட்டணம் ஊராட்சி தான் மராமத்து செய்து வருகிறது. ஆகையால் மைக் கேல் பட்டணம் ஊராட்சி எல்லையில் உள்ள சோலார் பிளாண்ட் தொழில் வரியை மைக்கேல் பட்டணம் ஊராட்சியில் செலுத்தினால் ஊராட்சித் வளர்ச்சியடை யும் என்றார். மேலும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த னர். மேலும் பேவர்பிளாக் சாலை, கல்வெட்டுகள் வேலை முடிக்கப்படாமல் உள்ளவற்றை சுட்டிக் காட்டி உடனடியாக முடிக்க வேண் டும் என உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி, ஊராட்சி எழுத் தர் லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் னர் பிரபக்கவூர் ஊராட்சி மீசல் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக் களிடம் குறைகள் கேட்டார். பிரபக்களுர் ஊராட்சி மன்ற தலைவர் தீப்ரநீதிரா ஜன் வரவேற்றார். குடிநீர், மின்விநியோகம் சாலை வசதி ஆகியவற்றை கேட்ட றிந்தார். மீசல் கிராமம் முழுவதும் மண் சாலையாகவே உள் ளன. இதனை பேவர் பிளாக் சாலையாக மாற்றித் தரவேண்டும் எனவும், போர்வெல் அமைத்துதர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.
- தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
- இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-
நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.
இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினார்கள்.
திருவாடானை
திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகு தியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தாலுகா தலைவர் அருள்சாமி தலை மையில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செய லாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை திட்டத்தில் பணி செய்பவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன கோஷங்களில் எழுப்பி னார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தி னம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயர்கல்வி முதல் திருமண விழா வரை ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பை சுய உதவிக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
- மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக் குட்பட்ட எல்.கருங்குளம் கிராமத்தில் கிராம மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்க ளின் பிள்ளைகளின் உயர் கல்விக்கும் கை கொடுக்கும் மகளிர் குழுவினருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.
கஷ்ட, நஷ்ட காலங்களில் கை கொடுப்பது உறவுகள் மட்டுமல்ல எல்.கருங்குளம் மகளிர் குழுவினர் கிராம மக்களுக்கு உதவி வரு கின்றனர். இதுபற்றி லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற் றும் மகளிர் குழுவினர் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-
பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விசேஷங்களை முன்னிட்டு குழு உறுப்பினர் களுக்கு ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பாக தருகி றோம். 26 உறுப்பினர்கள் மகளிர் குழுவில் உள்ளனர். ரூ.2 லட்சத்தை திருமணம் உள் ளிட்ட விசேஷ நிகழ்வுக ளுக்கு அன்பளிப்பாக வழங் குகிறோம். நாங்களே சீர்வ ரிசை பொருள்கள் வாங்கு வது, பந்தியில் பரிமாறுவது என முழு வீச்சில் வேலை களை கூட்டு முயற்சியுடன் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அடிப்படை யில் ஒற்றுமையாக விழாக்க ளில் பங்கேற்கிறோம். ஒரு முறை ரூ.2 லட்சம் பெற்ற வர்களுக்கு மீண்டும் வழங் காமல் சுழற்சி முறை யில் இதனை கடைப்பிடித்து உதவி வருகிறோம். மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
- தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய சங்க கூட்டம் நடந்தது.
- செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நீரினை பயன்படுத்து வோர் சங்க கூட்டம் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீரினை பயன்ப டுத்துவோர் சங்க கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு எடுத்துச் செல்வது.
2022-23ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் வைகை தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணி வராததால் இத னால் பாசனம் பெறும் 72 துணை கண்மாய்கள் நீர்வ ரத்து இல்லாமல் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்ட தால் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண வழங்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கண் மாய்களின் வாரத்துக்கு கால்வாய்களை தூர்வார வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் உகந்தான்குடி ராமநாதன், நாகனேந்தல் விசுவநாதன், பாரனூர் சரவணன், துணைத் செய லாளர் பால்ராஜ், சிறு வண்டல் முருகானந்தம் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவின் குருசடை தீவு பகுதிக்கு சென்றனர்.
- 4 பைபர் படகுகளில் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 8 பேரை அவர்களின் படகுகளுடன் பிடித்தனர்.
மண்டபம்:
இலங்கையை சேர்ந்தவர்கள் தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவின் குருசடை தீவு பகுதிக்கு சென்றனர். அப்போது 4 பைபர் படகுகளில் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 8 பேரை அவர்களின் படகுகளுடன் பிடித்தனர்.
அதே சமயம் மண்டபம் மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த 4 பேர் பைபர் படகு ஒன்றில் மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அவர்களையும் கடலில் அதிவேக ரோந்து படகில் சென்று விரட்டி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.
- சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ராமேசுவரம்:
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று புயலாக மாறி உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை 25-ந்தேதி அதிகாலை வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் ராமேசுவரத்தில் புயல் எதிரொலியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்லவில்லை. நாட்டு படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
ஹாமூன் புயல் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புயல் மேலும் வலு பெற்றதையடுத்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது புயல் தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்றால் சாலைகள் முழுவதும் மணல் மூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
- மாநில கபடி போட்டிக்கு புனித ஜான்ஸ் பள்ளி தகுதி பெற்றது.
- அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
கமுதி அருகே உள்ள கே.எம்.கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் 19-ம் வயதிற்குட்பட்ட இப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சிக்கல், உப்பூர்,சாயல்குடி, பரமக்குடி, ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி உட்பட ஏராளமான பகுதியில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.






