search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Proper permission"

    • பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    ×