மருது பாண்டியர்கள் குருபூஜை விழா

மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.
மருது பாண்டியர்கள் குருபூஜை விழா
Published on

பரமக்குடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் சங்கச் செயலாளர் கண்ணுச்சாமி தீர்மானங்களை வாசித்தார்.

முன்னதாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மருது பாண்டியர்களுக்கு பரமக்குடி ஓட்டபாலத்தில் அவர்களது உருவச்சிலை நிறுவவும், அகமுடையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் அகமுடையர் என மாணவ-மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கவும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் ராஜி நன்றி கூறினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள், பரமக்குடி புதுநகர் சங்க செயலாளர் எஸ்.ராமு, வழக்கறிஞர் சரவணாபாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com