search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உயர்கல்வி முதல் திருமண விழா வரை அன்பளிப்பு கொடுக்கும் சுய உதவிக்குழுவினர்
    X

    உத்திரகோசமங்கை அருகே லாந்தை எல்.கருங்குளம் கிராமத்தில் திருமண நிகழ்விற்கு ரூ.2 லட்சம் அன்பளிப்பு வழங்கிய மகளிர் குழுவினருடன் லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் உள்ளார்.

    உயர்கல்வி முதல் திருமண விழா வரை அன்பளிப்பு கொடுக்கும் சுய உதவிக்குழுவினர்

    • உயர்கல்வி முதல் திருமண விழா வரை ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பை சுய உதவிக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
    • மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக் குட்பட்ட எல்.கருங்குளம் கிராமத்தில் கிராம மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்க ளின் பிள்ளைகளின் உயர் கல்விக்கும் கை கொடுக்கும் மகளிர் குழுவினருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

    கஷ்ட, நஷ்ட காலங்களில் கை கொடுப்பது உறவுகள் மட்டுமல்ல எல்.கருங்குளம் மகளிர் குழுவினர் கிராம மக்களுக்கு உதவி வரு கின்றனர். இதுபற்றி லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற் றும் மகளிர் குழுவினர் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விசேஷங்களை முன்னிட்டு குழு உறுப்பினர் களுக்கு ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பாக தருகி றோம். 26 உறுப்பினர்கள் மகளிர் குழுவில் உள்ளனர். ரூ.2 லட்சத்தை திருமணம் உள் ளிட்ட விசேஷ நிகழ்வுக ளுக்கு அன்பளிப்பாக வழங் குகிறோம். நாங்களே சீர்வ ரிசை பொருள்கள் வாங்கு வது, பந்தியில் பரிமாறுவது என முழு வீச்சில் வேலை களை கூட்டு முயற்சியுடன் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அடிப்படை யில் ஒற்றுமையாக விழாக்க ளில் பங்கேற்கிறோம். ஒரு முறை ரூ.2 லட்சம் பெற்ற வர்களுக்கு மீண்டும் வழங் காமல் சுழற்சி முறை யில் இதனை கடைப்பிடித்து உதவி வருகிறோம். மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×