search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
    X

    ராமநாதபுரம் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

    • தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×