என் மலர்
நீங்கள் தேடியது "தனியார் நிறுவன மேலாளர்"
- தனியார் நிறுவன மேலாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
- உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள முருகானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகன் மகேந்தி ரன். இவர் சென்னையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி யில் உதவி மேலா ளராக பணியாற்றி வந்தார்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகநே்தி ரன் சொந்த ஊர் திரும்பி னார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதாகி இருந்தது.
இதையடுத்து மகேந்திரன் சம்பவத்தன்று கிணற்றில் இறங்கி பழுதான மின் மோட்டாரை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ராமநாத புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி பாகம் பிரியாள் கொடுத்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.