என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • 1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    • நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஊராட்சி யில் வேளாண்மைத்துறை யின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பள வில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்பொழுது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயி களுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தேவையான தென்னங் கன்றுகளை வாங்கி பயன் பெற வேண்டும்.

    தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவுசெய்து ''பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படை யில் தற்போது வேளாண்மை துறையின் மூலம் நாற்றங் கால் பண்ணைகளில் மரக் கன்றுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 10 லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன.

    நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி யாளர்கள் மூலம் பராமரித்தல், அதேபோல் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பசுமை ராமநாதபுரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரசுவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாக ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.

    சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


    கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணல் கடத்திய 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டிராக்டர்களில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சார்பு ஆய்வா ளர்கள் அசோக்சக்ரவர்த்தி, கார்த்திக், முனியாண்டி ஆகியோர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர்களை பிடித்தனர். அதிலிருந்த 11 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுகுமார்,கார்த்திக், பாக்கியராஜ், ராஜா கார்த்திக், பழனிசுவரன், ஜெகதீஸ்வரன், முனியசாமி, பிரகாஷ், உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் பொதுப்பணித்துறை கண்மாய்களும், 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன. சில வருடங்களாக பருவ மழை காலங்களில் மழை பெய்யாததாலும், மழை ஒரு சில பகுதியில் குறைந்த அளவே பெய்தாலும், கண்மாய்கள், வரத்துக் கால்வாய் தூர்வாரப் படாததால் கண்மாய்களில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவு கிறது. இதனால் கண்மாய் கள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

    இதுகுறித்து அபிராமம் பகுதி விவசாய சங்க நிர்வாகி கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை கண்மாய்கள் பெயரளவிற்கு தூர்வாரப்படுகிறது. ஆனால் யூனியன் கண்மாய் 30 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாரினாலும் ஆழமாகவோ, கண்மாய் கரையை பலப்படுத்துவதோ கிடையாது. வரத்துக் கால் வாயில் உள்ள முள்செடி களை கூட சுத்தப்படுத்துவது கிடை யாது. இதனால் பல லட்சம் அரசு பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர்கள் பயன்தரக்கூடிய நிலையில் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயி களுக்கு மிகப்பெரிய பொரு ளாதார இழப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடனும் வாங்கிய நிலையில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு வறட்சி நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க போர்க் கால அடிப்படையில் கண்மாய், குளங்களை தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காளீஸ்வரன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கொலை வழக்கில் தொடர்புடைய பல்லு பாலா, ரஞ்சித் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் காளீஸ்வரன் (வயது 24). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஷாஜகான் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் காளீஸ்வரனிடம் தகராறு செய்தது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் காளீஸ்வரனை ஓட ஓட அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த ஷாஜகானுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். ஷாஜகான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் கொலையுண்ட காளீஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரண்ட உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி ரோட்டில் மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர் இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    காளீஸ்வரன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காளீஸ்வரனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் ரஞ்சித் குமார் (29), நாகலிங்கம் மகன் குமார் என்ற கூலுக்குமாருக்கும் (30) பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளீஸ்வரன் தனது நண்பர்களுடன் கூலுக்குமார் வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தேவிபட்டினம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு பின் அவர்களுக்குள் முன்விரோதம் அதிகரித்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவானது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் குமார், கூலுக்குமார் அவரது நண்பர்கள் பல்லு பாலா, பாலகிருஷ்ணன் ஆகியோர் காளீஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பல்லு பாலா, ரஞ்சித் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன், கூலுக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • பரமக்குடியில் இன்று சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு சோலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி, சுந்தர பாலஆஞ்சநேய சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடந்தது. கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை உரப்புளி ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி ரவிந்திரன், துணைத்தலைவர் மல்லிகா நாகராஜன், ஊராட்சி செயலர் ரமேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், கலை முருகன், தினகரன், விஜயலட்சுமி, மல்லிகா, லட்சுமி காந்தம், ராணி, சுலோசனா ஆகியோர் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம்-அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
    • ராமநாதபுரம் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்/

    தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொகுதி பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், குழந்தை வேலு, ஜூடு, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தென்மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் தங்கம் வென்றது.
    • கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் கலந்து கொண்டன.

    மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கர்நாடக அணியை ஜூட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

    இறுதி போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச்செயலர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், மாவட்ட ஆக்கி சங்க சீனியர் துணைத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ஆக்கி சங்க மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த்ராஜ், துணைத்த லைவர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    • ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 83-வது பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, திரு மஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றி தீபாராதனை காண்பித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றம் நடந்து முடிந்தபின் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவில் வருகிற 5-ந்தேதி காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    அங்கு காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடிகளுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு கோவில் முன்பு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ரமலான் மாதம் பிறந்து விட்டாலே எங்கு பார்த்தாலும் நோன்புக்கஞ்சியின் வாசம் கமகமக்கும். அதிகாலையிலிருந்து மாலை வரை நோன்பை கடைப்பிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தி அளிக்கும் உணவாக விளங்குகிறது.

    நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்காக தயாரிக்கப்பட்டாலும், அனைத்து சமுதாய மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கஞ்சியின் கூடுதல் சுவைக்காக ஆட்டு இறைச்சி சேர்த்து வருகின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சோர்வை நீக்கி, உடலின் வெப்பத்தை தணித்து, ஜீரணசக்தியை ஏற்படுத்துகிறது. திட உணவில் இது போன்ற சத்து இருப்பதில்லை. பக்க விளைவில்லாத உணவாக இருப்பதால் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு மாதம் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    கீழக்கரை, ராமநாதபுரம், ஏர்வாடி, தொண்டி, மண்டபம், பாம்பன், பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நோன்புக்கஞ்சி பள்ளிவாசல்களில் மட்டு மில்லாமல் வீடுகளிலும் தயார் செய்து நோன்பு கஞ்சியை ஏழை,எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமங்களிலும் முஸ்லிம் மக்கள் இறைவன் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாத் மூலமாக வழங்கி வருகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் குலுக்கல் முறையில் நன்கொடையா ளர்களை தேர்வு செய்கின்றனர்.

    முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமூக மக்களும் விரும்பி பருகுவதால் தநல்லிணக்கத்தின் மறு பெயராகவும், ரமலான் மாதத்தின் அடையாளமாகவும் நோன்புக்கஞ்சி திகழ்கிறது என்றால் மிகையாகாது.

    • விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
    • வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (வயது52). இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வாழை, மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பணப்பயிறுகளை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்து வருகிறார். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து சண்முகப்பிரியா, மேலாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) விஜயலட்சுமி ஆகியோர் ராமரின் மிளகாய் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பாக்குவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்கள், ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து வேளாண்மை திட்டங்களை குறித்து ஆலோசனை வழங்கினர். கமுதி வேளாண்மை வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×