search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blind spots"

    • அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் பொதுப்பணித்துறை கண்மாய்களும், 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன. சில வருடங்களாக பருவ மழை காலங்களில் மழை பெய்யாததாலும், மழை ஒரு சில பகுதியில் குறைந்த அளவே பெய்தாலும், கண்மாய்கள், வரத்துக் கால்வாய் தூர்வாரப் படாததால் கண்மாய்களில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவு கிறது. இதனால் கண்மாய் கள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

    இதுகுறித்து அபிராமம் பகுதி விவசாய சங்க நிர்வாகி கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை கண்மாய்கள் பெயரளவிற்கு தூர்வாரப்படுகிறது. ஆனால் யூனியன் கண்மாய் 30 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாரினாலும் ஆழமாகவோ, கண்மாய் கரையை பலப்படுத்துவதோ கிடையாது. வரத்துக் கால் வாயில் உள்ள முள்செடி களை கூட சுத்தப்படுத்துவது கிடை யாது. இதனால் பல லட்சம் அரசு பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர்கள் பயன்தரக்கூடிய நிலையில் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயி களுக்கு மிகப்பெரிய பொரு ளாதார இழப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடனும் வாங்கிய நிலையில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு வறட்சி நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க போர்க் கால அடிப்படையில் கண்மாய், குளங்களை தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×